இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Sailor (கப்பலோட்டி, மாலுமி) - தமிழ்ச்சொற்கள்

Sailor (கப்பலோட்டி, மாலுமி) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. ஒசுநர். 2. கப்பலோட்டி. 3. கப்பற்காரர். 4. கலவர். 5. நாவாய்கர். 6. நீகாமர். 7. நீயார். 8. மரக்கலர். 9. மீகாமர். 10. மீகார். 11. மீயார். 12. மீவார். வேறு சில சொற்கள்: மண்டாடி = வள்ளத்தைச் செலுத்துபவர். கடற்பாய்ச்சி = கடலில் கப்பல் செலுத்துபவர், sailor. ஆற்றுப்பாய்ச்சி= ஆறுகளில் கப்பல் செலுத்துபவர், river navigator. #சொற்றொகுப்பு

Secret - தமிழ்ச்சொற்கள்

 Secret ('இரகசியம்'/'மந்தணம்') எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:  1. அகந்தரம். 2. அரங்கம். 3. அருமறை. 4. அற்றம். 5. ஆந்தரம். 6. ஆய். 7. ஆயம். 8. ஆயமானம். 9. ஆழம். 10. ஆழி. 11. உட்புரை. 12. உட்பொருள். 13. உள்ளடி. 14. உள்ளரங்கம். 15. உள்ளாப்பு. 16. உள்ளிடை. 17. உள்ளீடு. 18. உளவு. 19. ஒடுக்கம். 20. கப்பு. 21. கமுக்கம். 22. கரவம். 23. குட்டு. 24. குமுக்கு. 25. குய்யம். 26. கூகம். 27. கூடம். 28. கோப்பியம். 29. சன்னைசாடை. 30. சித்திரம். 31. சூது. 32. சூன். 33. துறவு. 34. பூட்டு. 35. பூட்டகம். 36. புரை. 37. புரைசல். 38. மந்தணம். 39. மருமம். 40. மறை. 41. மறைபொருள். 42. மறைவு. #சொற்றொகுப்பு