இடுகைகள்

அம்பு - தமிழ்ச்சொற்கள்

அம்பு (arrow) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள் 1. அப்பு. 2. அம்பு. 3. அரி. 4. ஆவரி 5. ஈ. 6. உடு. 7. எய். 8. ஏ. 9. ஏவு. 10. கடம்பம். 11. கணை. 12. கணையம். 13. கதிரம். 14. குதை. 15. கோ. 16. கோல். 17. சரம். 18. துணை. 19. தொடை. 20. பகழி. 21. புதை. 22. பூதை. 23. வண்டு. 24. வாசி. 25. வாளி. 26. விடுசி. 27. விடூசி. #சொற்றொகுப்பு

இடு

#இடு: 'இடு' எனும் அடிச்சொல்லானது ஒடுங்குதல் எனும் பொருளில் அமைந்து பின், ஒடுக்கிப் பிடித்தல், துன்பம் எனும் பொருள்களில் வளர்கிறது. *இடு > இடுகு-தல் = ஒடுங்குதல்; To contract, சிறுகுதல்; To become dwindled இடுகு > இடுங்கு-தல் = உள்ளொடுங்குதல்; To shrink, contract. இடுகு > இடுக்கு இடுக்கு-தல் = கவ்வுதல்; To take between the fingers or toes; to grasp or grip, as with pincers, அணைத்தல்; To take under one's arm, நெருக்குதல்; To press or squeeze as between two boards. இடுக்கு = முடுக்கு; Narrow lane, சங்கடம்; Difficulty, straits, மூலை; Corner, nook, இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம்; Parting between fingers; cleft in the split wood; any place where a person or thing may get pressed or wedged in, கவ்வுமுறுப்பு; Prehensile claws இடுக்கு > இடுக்கம் = ஒடுக்கம்; Closeness, narrowness of space, துன்பம்; distress, trouble. *இடு > இட்டு = சிறுமை; Smallness, சிறிது; A little, small thing இடுக்கு > இடுக்கண் = இரக்கம்; Misery that is reflected by shrunken eyes, துன்பம்; woe, aff

தும்பட்டை

#தும்பட்டை: தும்பட்டை = தூசி, குப்பை. இச்சொல், 'தூசித் தும்பட்டை' என இணைச்சொல்லில் ஒரு சொல்லாகப் பயன்படுகிறது. தும் > *தும்பு > தும்பட்டை தும் = தூசி; Dust. தும்பு = தூசி; Dust. தும்படைசி = அழுக்குப்போக்குங் கருவி; Brush. தும்புக்கட்டு = தேங்காய் நாரால் செய்த துடைப்பம்; விளக்குமாறு; broomstick. எ. கா. "அங்க தூசித் தும்பட்டையா கெடக்கு!" இச்சொல், 'துப்பட்டை' எனவும் பலுக்கப்படுகிறது.

நுணுத்தம்

 #நுணுத்தம்: நுணுத்தம் = minute நேர அளவைக் குறிக்கும் 'Minute' சொற்கு இணையாகத் தமிழில் 'நுணுத்தம்' எனுஞ் சொல்லைப் பயன்படுத்தலாம். நுண் = அணு, நுண்மை, minute particle. நுண் > நுண்மை = fineness, minuteness நுண் > *நுணுத்து > நுணுத்தம் நோக்க: நுண் > நுணுக்கு > நுணுக்கம் = நுண்மை காண்க: https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0gTHQwa6JrVxcWiT8JNHrQu9ZiXqpkdEDRXEwqUdQGAvGbjseSQLE83SpAv573dE6l&id=100044509273605 http://valavu.blogspot.com/2008/02/4.html

உணர்க்கை

 #ஒணக்க #உணர்க்கை உணர்க்கை = உணர்வு; sensibility. வட்டார வழக்கில், உணர்க்கை > உணக்க/ஒணக்க எனத் திரியும். * உள் > * உண் > உணர் > உணர்க்கை உணர்-தல் = அறிதல்; To be conscious of; to know, make out, understand, உள்ளத்தால் அறிதல்; to feel. பேச்சு வழக்கில், உ > ஒ ஆவதும் இடையில் வரும் ரகர மெய் (ர்) கெடுவதும் இயல்பு. எ. கா. "அவன் ஒணக்க கெட்டவன்!" மேலும் வழக்கில், சுவையைக் குறிக்க 'ஒணக்க' என்று பயன்படுத்துவதுண்டு. அதையும் உணர்க்கை என்ற சொல்லோடு ஒப்பிடலாம். உணவை உணரும் பொருளால், உணர்க்கை > ஒணக்க என்றாகியிருக்கலாம். "Tea ஒணக்கையா இருக்கு!" "சோத்த ஒணவா செஞ்சிருக்க!" இங்கு, ஒணக்க = சுவையாக என அறியலாம்.

துரப்பணம்

 #துரப்பணம்: துரப்பணம் = Drill, Drilling Machine. * துள் > * துர் > துர-த்தல் = To tunnel, bore; துளைத்தல் துருவல் = துளைத்தல்; boring, drilling. துருவு-தல் = துளைத்தல்; to bore, drill. துருவு = தொளை; Hole. துரப்பணம் (< துரப்பு < துர) = auger, drill, tool for boring holes; துளையிடுந் தச்சுக்கருவி. Malayalam. turappaṇam "carpenter's drill, gimlet" (அணம் - ஓர் ஈறு) திறப்பணம், துருப்பணம் = a carpenter's drill, துரப்பணம் துறப்பபணவலகு = துறப்பணக்கோலிலுள்ள ஊசி; Drill-bit. துரப்பணக் கிணறு = நிலத்தடியிலிருந்து நீர் எடுப்பதற்காகத் தோண்டப்படும் ஆழ்குழாய்க் கிணறு; deep bore-well. துருவலகு = தேங்காய் முதலியன துருவுங் கருவி; Scraping instrument; துருவல்மணை, துருவுமணை, துருவுபலகை, துருவுகோல் = துருவலகு. ஒப்புநோக்கத்தக்கன: திருகுமணை = தேங்காய் துருவும் மணை; Coconut-scraper. திருகூசி = ஓலையில் துளையிடுங் கருவிவகை; Drill to bore holes in an ola book. திருகு= சுரி; Screw, swivel, முறுக்கு; Twist, wrench, அணியின் திருகுமரை; Thread of a screw. திருகு-தல் = முறுக்குதல்; To twi

சாரி

 #சாரி: சார் > சாரி சார் = கூடுகை; Joining, uniting, இடம்; Place, situation, பக்கம்; Side. சாரி = பக்கம்; Side, wing, row or series. எ. கா. "இடதுசாரி", "எதிர்ச் சாரி வீடு" Kota. ca·ry "near" aṛ ca·ry "left side" val ca·ry, val ka ca·ry "right side" o ca·ry "one side" val ca·rym "all around"