இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்பு - தமிழ்ச்சொற்கள்

அம்பு (arrow) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள் 1. அப்பு. 2. அம்பு. 3. அரி. 4. ஆவரி 5. ஈ. 6. உடு. 7. எய். 8. ஏ. 9. ஏவு. 10. கடம்பம். 11. கணை. 12. கணையம். 13. கதிரம். 14. குதை. 15. கோ. 16. கோல். 17. சரம். 18. துணை. 19. தொடை. 20. பகழி. 21. புதை. 22. பூதை. 23. வண்டு. 24. வாசி. 25. வாளி. 26. விடுசி. 27. விடூசி. #சொற்றொகுப்பு

இடு

#இடு: 'இடு' எனும் அடிச்சொல்லானது ஒடுங்குதல் எனும் பொருளில் அமைந்து பின், ஒடுக்கிப் பிடித்தல், துன்பம் எனும் பொருள்களில் வளர்கிறது. *இடு > இடுகு-தல் = ஒடுங்குதல்; To contract, சிறுகுதல்; To become dwindled இடுகு > இடுங்கு-தல் = உள்ளொடுங்குதல்; To shrink, contract. இடுகு > இடுக்கு இடுக்கு-தல் = கவ்வுதல்; To take between the fingers or toes; to grasp or grip, as with pincers, அணைத்தல்; To take under one's arm, நெருக்குதல்; To press or squeeze as between two boards. இடுக்கு = முடுக்கு; Narrow lane, சங்கடம்; Difficulty, straits, மூலை; Corner, nook, இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம்; Parting between fingers; cleft in the split wood; any place where a person or thing may get pressed or wedged in, கவ்வுமுறுப்பு; Prehensile claws இடுக்கு > இடுக்கம் = ஒடுக்கம்; Closeness, narrowness of space, துன்பம்; distress, trouble. *இடு > இட்டு = சிறுமை; Smallness, சிறிது; A little, small thing இடுக்கு > இடுக்கண் = இரக்கம்; Misery that is reflected by shrunken eyes, துன்பம்; woe, aff