இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தும்பட்டை

#தும்பட்டை: தும்பட்டை = தூசி, குப்பை. இச்சொல், 'தூசித் தும்பட்டை' என இணைச்சொல்லில் ஒரு சொல்லாகப் பயன்படுகிறது. தும் > *தும்பு > தும்பட்டை தும் = தூசி; Dust. தும்பு = தூசி; Dust. தும்படைசி = அழுக்குப்போக்குங் கருவி; Brush. தும்புக்கட்டு = தேங்காய் நாரால் செய்த துடைப்பம்; விளக்குமாறு; broomstick. எ. கா. "அங்க தூசித் தும்பட்டையா கெடக்கு!" இச்சொல், 'துப்பட்டை' எனவும் பலுக்கப்படுகிறது.

நுணுத்தம்

 #நுணுத்தம்: நுணுத்தம் = minute நேர அளவைக் குறிக்கும் 'Minute' சொற்கு இணையாகத் தமிழில் 'நுணுத்தம்' எனுஞ் சொல்லைப் பயன்படுத்தலாம். நுண் = அணு, நுண்மை, minute particle. நுண் > நுண்மை = fineness, minuteness நுண் > *நுணுத்து > நுணுத்தம் நோக்க: நுண் > நுணுக்கு > நுணுக்கம் = நுண்மை காண்க: https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0gTHQwa6JrVxcWiT8JNHrQu9ZiXqpkdEDRXEwqUdQGAvGbjseSQLE83SpAv573dE6l&id=100044509273605 http://valavu.blogspot.com/2008/02/4.html

உணர்க்கை

 #ஒணக்க #உணர்க்கை உணர்க்கை = உணர்வு; sensibility. வட்டார வழக்கில், உணர்க்கை > உணக்க/ஒணக்க எனத் திரியும். * உள் > * உண் > உணர் > உணர்க்கை உணர்-தல் = அறிதல்; To be conscious of; to know, make out, understand, உள்ளத்தால் அறிதல்; to feel. பேச்சு வழக்கில், உ > ஒ ஆவதும் இடையில் வரும் ரகர மெய் (ர்) கெடுவதும் இயல்பு. எ. கா. "அவன் ஒணக்க கெட்டவன்!" மேலும் வழக்கில், சுவையைக் குறிக்க 'ஒணக்க' என்று பயன்படுத்துவதுண்டு. அதையும் உணர்க்கை என்ற சொல்லோடு ஒப்பிடலாம். உணவை உணரும் பொருளால், உணர்க்கை > ஒணக்க என்றாகியிருக்கலாம். "Tea ஒணக்கையா இருக்கு!" "சோத்த ஒணவா செஞ்சிருக்க!" இங்கு, ஒணக்க = சுவையாக என அறியலாம்.

துரப்பணம்

 #துரப்பணம்: துரப்பணம் = Drill, Drilling Machine. * துள் > * துர் > துர-த்தல் = To tunnel, bore; துளைத்தல் துருவல் = துளைத்தல்; boring, drilling. துருவு-தல் = துளைத்தல்; to bore, drill. துருவு = தொளை; Hole. துரப்பணம் (< துரப்பு < துர) = auger, drill, tool for boring holes; துளையிடுந் தச்சுக்கருவி. Malayalam. turappaṇam "carpenter's drill, gimlet" (அணம் - ஓர் ஈறு) திறப்பணம், துருப்பணம் = a carpenter's drill, துரப்பணம் துறப்பபணவலகு = துறப்பணக்கோலிலுள்ள ஊசி; Drill-bit. துரப்பணக் கிணறு = நிலத்தடியிலிருந்து நீர் எடுப்பதற்காகத் தோண்டப்படும் ஆழ்குழாய்க் கிணறு; deep bore-well. துருவலகு = தேங்காய் முதலியன துருவுங் கருவி; Scraping instrument; துருவல்மணை, துருவுமணை, துருவுபலகை, துருவுகோல் = துருவலகு. ஒப்புநோக்கத்தக்கன: திருகுமணை = தேங்காய் துருவும் மணை; Coconut-scraper. திருகூசி = ஓலையில் துளையிடுங் கருவிவகை; Drill to bore holes in an ola book. திருகு= சுரி; Screw, swivel, முறுக்கு; Twist, wrench, அணியின் திருகுமரை; Thread of a screw. திருகு-தல் = முறுக்குதல்; To twi

சாரி

 #சாரி: சார் > சாரி சார் = கூடுகை; Joining, uniting, இடம்; Place, situation, பக்கம்; Side. சாரி = பக்கம்; Side, wing, row or series. எ. கா. "இடதுசாரி", "எதிர்ச் சாரி வீடு" Kota. ca·ry "near" aṛ ca·ry "left side" val ca·ry, val ka ca·ry "right side" o ca·ry "one side" val ca·rym "all around"

பன்றி

 #பன்றி: 'கருமை' எனும் அடிப்பொருள் கொண்டு கருநிற விலங்கான பன்றியைக் குறிக்கும் சொற்கள்: #கருமா: கருமா (கரு + மா) = பன்றி; Pig. கரு - கருமை; Blackness, Dark Color மா = விலங்கு; Animal, Beast. #கருமான்: கருமான் (கரு + மான்) = பன்றி; Hog. மான் ( < மா*) = விலங்கு #இருளி: இருள் > இருளி = பன்றி; Pig. இருள் = கறுப்பு; blackness, Darkness. இருளுதல் - கருமை கவிதல் #இருணி: * இருளி > இருணி = பன்றி; Hog. #மைம்மா: மைம்மா (மை + மா) = பன்றி; Pig. மை-த்தல் = கறுத்தல்; To become black, ஒளிமழுங்குதல் To be dim. மை = கறுப்பு; Black, blackness. மா = விலங்கு.

ஓணான்

#ஓணான்: 'ஓண்' எனும் முந்தை வடிவம் இந்த வகையான பல்லி இனத்தைக் பொருளாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம். * ஓண் > ஓணான் = ஓந்தி ; lizard, bloodsucker. calotes veisicolor. * ஓண் > ஓந்தி = [K. ōti, M. ōndu, Tu. ōnti.] ஓணான்; Blood-sucker, a common agamoid lizard. ஓந்தி > ஓத்தி = ஓந்தி; Blood-sucker, பச்சோந்தி; Chameleon. ஓந்தி > ஓதி = ஓணான்; lizard, blood-sucker ஓந்தி > ஓந்தான் = ஓணான்; Bloodsucker. (ஓணான் >) ஓமான் = ஓணான்; Blood-sucker, a common agamoid lizard. (*ஓண் > ஓடு > ) ஓடக்கான்/ஒடுக்கான் = ஓணான்; common lizard ஒடக்கான் என்று வட்டார வழக்கில் சொல்லப்படுகிறது. Toda. wï·č "large jungle lizard" Ka. ōti, onti "a kind of lizard or chameleon, bloodsucker" Koḍagu. ōndi, ōtikētë "chameleon" Tulu. ōnti "bloodsucker, salamander" Malto. ute "a tree lizard" சிவப்போணான் = சிறு ஓணான் வகை; A species of small blood-sucker. பச்சோணான் (பச்சை+ஓணான்) = ஓணான்வகை; Chameleon. பேயோணான் = ஓணான்வகை; Large bloodsucker. கரட்டோனான்/கர

ஊஞ்சல்

 #ஊசல் #ஊஞ்சல்: இச்சொற்கட்கு 'ஊங்கு' என்பதே அடிச்சொல்லாகக் காட்டப்படுகிறது. ஆனால், 'உய்' என்பதே அடிச்சொல்லாக இருக்கலாம் என்பது என் கருத்து. உய்-த்தல் = செலுத்துதல்; To direct, guide. உயல்-தல் = அசைதல்; To wave, shake. ஊங்கு-தல்= ஆடுதல்; To swing ஊக்கு-தல் = ஆட்டுதல்; To swing, shake ஊக்கு > ஊகு-தல் = அசைதல்; to move, ஊசலாடுதல்; to swing. Telugu. ū̃ku, ū̃kincu, ū̃gincu, ū̃cu, ū̃pu "to shake, move" ū̃ka "swinging" ū̃gu "to swing, rock, totter, be shaken or agitated" Kolami. ūŋg-, uŋ-, ūp- "to swing" Parji. ūñ-, ūcip-, ū̃g- "to swing" Gondi. ūŋg-, ūṅgānā "to swing" உஞ்சல் = ஊஞ்சல்; Swing. ஊங்கு > (*ஊஞ்சு) > ஊஞ்சல் = ஊசல்; Swing, ஊசற்பாட்டு; Song to accompany swinging. Malayalam. ūñcal, ūyal, ūññāl, ūññalu, iñcāla, iccāl "a swing" Kannada. uyyal(u), uyyale, uyyālu, uyyāle, uvāle, uvvāle "a swing" Gondi. ūyal "swing" Tulu. ū˘yyālů, ujjālů "swing, hammock" uccā

பெட்டி

 #பெட்டி: 'பிள்' என்பதே வேர்ச்சொல்லாக இருந்திருக்கக்கூடும். * பிள் > * பெள் > பெட்டி பெட்டி = Chest, trunk, coffer, box, கூடை; Basket, flower-basket, தொடரி முதலியவற்றின் அறை; Compartment as in Train, வண்டியோட்டுபவர் உட்காரும் இடம்; Driver's seat in a carriage, சாட்சிக்கூடு; Witness-box பெட்டி > பொட்டி பொட்டி = பெட்டி; Box Ma. peṭṭi "box, trunk" peṭṭakam "box, chest" To. poṭy "box" pe·ḍy "large basket tied around with cloth" Kannada. peṭṭi "box, chest, trunk" peṭṭige, peṭṭiya "box, basket" Koḍagu. poṭṭi "box" Tulu. peṭṭigè "box, chest" Telugu. peṭṭe "box, safe" Parji. peṭeya "box" பெட்டி + * அகம் > பெட்டகம் பெட்டகம் = பெட்டி; Chest, box, மணப்பெண்ணுக்கான சீர்வரிசைப் பெட்டி; A box in which presents to the bride are carried in procession பெட்டகம் > பேடகம் பேடகம் = பெட்டி; Box, கூடை; Basket * பிள் > (பிடு) > பிடகம் பிடகம் = கூடை; Basket. பிழா > > பே

அங்காடி

 #அங்காடி: அங்காடி = சந்தை, கடை, கடைத்தெரு; bazaar, bazaar street Malayalam. aṅṅāṭi "shop, bazaar" Telugu. aṅgaḍi "shop, stall" Kannada. aṅgaḍi "shop, stall" Koḍagu. aŋgaḍi "shop, stall" Tulu. aṅgaḍi "shop, stall". Kota. aŋga·ḍy "shop, bazaar" Toda. ogoḏy "bazaar" Kolami. aŋgaḍi "bazaar Naikri. aŋgāṛi, aŋgāṛ "bazaar" 'அங்காடி'யில் உள்ள '-காடி', கடை எனுஞ்சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்பது என் கருத்து. கடை > -காடி நோக்க: பாம்பரணை > பாம்புராணி தலையணை > தலையாணி/தலைகாணி அல்லங்காடி = மாலைக் கடைத்தெரு; evening bazaar. பகலங்காடி = காலைக் கடை; morning market, பகல் நேரச் சந்தை ; Day-bazaar. நாளங்காடி = பகலங்காடி. பல்பொருள் அங்காடி = பல பொருள் விற்கப்படும் இடம்; supermarket; departmental store. அங்காடிபாரி-த்தல் = மன அரசாளுதல், வானக்கோட்டை கட்டுதல்; to build castles in the air. அங்காடிப்பண்டம் = எளிதிற் கடையிற் பெறக்கூடிய சரக்கு; Article readily available in the market. அங்காடிக்கூடை =

கொல் - கொற்றவை

#கொற்றவை: 'கொல்' எனும் வினையடியானது, கொல்லுதல் எனும் பொருளை முதலில் குறித்துப் பின் அதனின்று கிடைக்கும் வெற்றியைக் குறித்திருக்கலாம். கொல் = கொலைத்தொழில்; Act of killing *கொல் > (கொற்று) > கொற்றம் = வெற்றி; victory, வீரம்; bravery, வன்மை; strength, அரசியல்; kingship, government. Malayalam. koṟṟam "victory, royalty" கொற்றவை (< கொற்றவ்வை = கொற்றம் + அவ்வை) = காடுகாள், வெற்றித் தெய்வம்; the Goddess of war & victory. கொற்றம் > கொற்றவன் = King, monarch; அரசன், Victor; வெற்றியாளன் Malayalam. koṟṟavan "king, headman" கொற்றி = கொற்றவை, ஒருவகை வரிக்கூத்து; A masquerade dance. கொற்றவி = அரசி; Queen கொற்றியார் = பிள்ளைப் பேற்றின் கடவுள்; The goddess of parturition கொற்றவஞ்சி = பகைவரை வாளோச்சி அழித்த அரசனது புகழைப் பெருகவுரைக்கும் புறத் துறை; theme praising a king who destroyed his enemies with his sword கொற்றவள்ளை = பகைவர் தேசம் கெடு வதற்கு வருந்துவதைக் கூறுமுகத்தான் அரசன் கீர்த்தி யைச் சொல்லும் புறத்துறை; theme praising the valor of a king by regr