#இடு: 'இடு' எனும் அடிச்சொல்லானது ஒடுங்குதல் எனும் பொருளில் அமைந்து பின், ஒடுக்கிப் பிடித்தல், துன்பம் எனும் பொருள்களில் வளர்கிறது. *இடு > இடுகு-தல் = ஒடுங்குதல்; To contract, சிறுகுதல்; To become dwindled இடுகு > இடுங்கு-தல் = உள்ளொடுங்குதல்; To shrink, contract. இடுகு > இடுக்கு இடுக்கு-தல் = கவ்வுதல்; To take between the fingers or toes; to grasp or grip, as with pincers, அணைத்தல்; To take under one's arm, நெருக்குதல்; To press or squeeze as between two boards. இடுக்கு = முடுக்கு; Narrow lane, சங்கடம்; Difficulty, straits, மூலை; Corner, nook, இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம்; Parting between fingers; cleft in the split wood; any place where a person or thing may get pressed or wedged in, கவ்வுமுறுப்பு; Prehensile claws இடுக்கு > இடுக்கம் = ஒடுக்கம்; Closeness, narrowness of space, துன்பம்; distress, trouble. *இடு > இட்டு = சிறுமை; Smallness, சிறிது; A little, small thing இடுக்கு > இடுக்கண் = இரக்கம்; Misery that is reflected by shrunken eyes, துன்பம்; woe, aff...