மரக்கல வகை
* புணை - நீரில் மிதக்கும் கட்டை
* தெப்பம் - பல மிதப்புக் கட்டைகளின் சேர்க்கை * கட்டுமரம் - இருகடையும் வளைந்த மரக்கட்டு * தோணி - தோண்டப்பட்ட மரம் போல்வது * ஓடம் - வேகமாய்ச் செல்லும் தட்டையான தோணி * திமில் - திரண்ட மீன்படகு * பஃறி - பன்றி போன்ற வடிவமுள்ள தோணி* பரிசில் - வட்டமான பிரம்புத் தோணி;
* அம்பி - விலங்குமுகம் அல்லது பறவை முகம் போன்ற முகப்பையுடைய மரத்தோணி
* படகு - பாய் கட்டிய தோணி
* நாவாய் - நீரைக் கொழித்துச் செல்லும் போர்க்கலம்
* கப்பல் - பலவாய் கட்டி வணிகச் சரக்கேற்றிச் செல்லும் பெருங்கலம்
~ #பாவாணர் (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)
கருத்துகள்
கருத்துரையிடுக