ஒலி வகைகள்
* அரவம் - பொதுவான ஒலி
* குரல் - தொண்டையொலி
* இசை - இனிய ஒலி
* ஒலி - எழுத்தொலி
* கூச்சல் - பலர்கூடிக் கத்துமொழி
* பூசல் - சண்டையிலும் போரிலும் கேட்கும் ஒலி
* முழக்கம் - இடியாலும் பறையாலும் உண்டாகும் பேரொலி
* ஓசை - சொற்றொடர் அல்லது பாட்டொலி
* ஆரவாரம் - பெரிய ஊர்வலத்தில் கேட்கும் பல் இயவொலி
* இரைச்சல் மழை அருவி சந்தைக்கூட்டம் முதலியவற்றின் பேரொலி
* ஆர்ப்பு - மாபெருங் கூட்டத்தின் வாழ்த்து அல்லது கண்டன வொலி
* சிலம்பு - எதிரொலி
* சிலை - பாடும்போது கலகலவென்றிலங்கும் ஒலி
* சந்தடி - விழா நிகழிடத்திலும் மாநகர வீதியிலும், பல்வேறு கவனமுள்ள மக்கள் தொழிலாலுண்டாகும் ஒலி
* சந்தம் - அசையொத்த அடிகளைக் கொண்ட பாட்டொலி
* வண்ணம் - எழுத்தொத்த அடிகளைக் கொண்ட பாட்டொலி
~ #பாவாணர் (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)
கருத்துகள்
கருத்துரையிடுக