அங்காடி

 #அங்காடி:

அங்காடி = சந்தை, கடை, கடைத்தெரு; bazaar, bazaar street

Malayalam. aṅṅāṭi "shop, bazaar"
Telugu. aṅgaḍi "shop, stall"
Kannada. aṅgaḍi "shop, stall"
Koḍagu. aŋgaḍi "shop, stall"
Tulu. aṅgaḍi "shop, stall".
Kota. aŋga·ḍy "shop, bazaar"
Toda. ogoḏy "bazaar"
Kolami. aŋgaḍi "bazaar
Naikri. aŋgāṛi, aŋgāṛ "bazaar"

'அங்காடி'யில் உள்ள '-காடி', கடை எனுஞ்சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்பது என் கருத்து.

கடை > -காடி

நோக்க:
பாம்பரணை > பாம்புராணி
தலையணை > தலையாணி/தலைகாணி

அல்லங்காடி = மாலைக் கடைத்தெரு; evening bazaar.
பகலங்காடி = காலைக் கடை; morning market, பகல் நேரச் சந்தை ; Day-bazaar.
நாளங்காடி = பகலங்காடி.
பல்பொருள் அங்காடி = பல பொருள் விற்கப்படும் இடம்; supermarket; departmental store.

அங்காடிபாரி-த்தல் = மன அரசாளுதல், வானக்கோட்டை கட்டுதல்; to build castles in the air.
அங்காடிப்பண்டம் = எளிதிற் கடையிற் பெறக்கூடிய சரக்கு; Article readily available in the market.
அங்காடிக்கூடை = கடைவீதியில் பண்டங்கள் வைக்கப்பட்டிருக்குங் கூடை; A vendor's basket.
அங்காடிகூறு-தல் = பொருள் விற்குமாறு கூவுதல்; To cry out provisions for sale.
அங்காடிக்கூலி = கடைவரி; Tax collected from stalls opened in the bazaar.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்