இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அணை (dam) - தமிழ்ச்சொற்கள்

அணை (dam) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அணை. 2. ஒட்டு. 3. கங்கு. 4. கட்டு. 5. கட்டை. 6. குரம்பு. 7. சிறை. 8. பாலம். 9. மறிசல். 10. வரம்பு. #சொற்றொகுப்பு

மன்னன்

#மன்னன்: மன்னு-தல் = நிலைபெறுதல்; To be permanent; to endure, தங்குதல்; To remain long; to stay 'மன்' எனும் வினையடி, தங்கும் மாந்தரை முதலில் குறித்துப் பின் நிலைபெற்றிருக்கும் அரசனையும் குறிக்கும். மன் (< மன்னு) = அரசன்; King, தலைவன்; Lord, chief, கணவன்; Husband மன்னன் ( < மன்) = அரசன்; King, எப்பொருட்கு மிறை வன்; The Universal Lord, தலைவன்; Chief, கணவன், ஆடவன்; Man in his prime, between the ages of 32 and 48 மன்னவன் = மன்னன்; king மன்னறம் (மன்+அறம்) = அரச அறம்; Duties of sovereignty. மன்பதை ( < மன்பது) = படை; Army, மக்கட்பரப்பு; Humanity மன்பது = மன்பதை மன்னுமான் (< மன்னு) கடவுள்; God, as the Eternal Being Malayalam. mannan, mannavan king Kannada. manneya chieftain, commander Telugu. manniya, manniyãḍu, mannī˜ḍu, manne, mannẽḍu, mannekã̄ḍu lord, suzerain, chief, chieftain ஒப்புநோக்கத்தக்கன: மந்து = அரசன்; King, மனிதன்; Man மன்றம் = அவை; Hall, assembly, அறமன்றம்; Court, போர்க்களப்பரப்பின் நடுவிடம்; Central place in a battlefield. வீடு; House

வீசு

 #வீசு: '*விசு' எனும் முந்துவடிவத்திற்கு விரைவு எனும் பொருள் இருந்திருக்கலாம். *விசு > விசிறு-தல் = விசிறியால் காற்றெழுப்புதல்; To fan, வாள் முதலியவற்றை வீசுதல்; To wave to and fro, brandish, வலை முதலியவற்றை விரித்தெறிதல்; To fling, hurl, cast, as a net, சுழற்றுதல்; To whirl round, சொரிதல்; To pour forth; to sprinkle, வெளித் தள்ளுதல்; To eject, discharge, போக்குதல்; To remove, கை முதலியன வீசுதல்; To swing, as the arms in walking *விசு > விசை-த்தல் = விரைவு பண்ணுதல்; To hasten; to cause to move swiftly, வீசுதல்; To swing, துள்ளுதல்; To leap, hop, சிதறுதல்; To burst, split, கடுமையாதல்; To be forceful, கோபப்படுதல்; To become angry விசை = Force விசை = வேகம்; Haste, speed, impetus, நீண்டுசுருங்குந் தன்மை; Elasticity, spring. *விசு > வீசு-தல் = எறிதல்; To throw, fling, as a weapon; to cast, as a net, சிறகடித்தல்; To flap, as wings, ஆட்டுதல்; To swing, as the arm, இரட்டுதல்; To fan, சுழற்று தல்; To wave, flourish, as a sword, காற்று முதலியன அடித்தல்; To blow, as ...

அழு

 #அழு: 'அழு' எனும் வினையடி அழுதலைக் குறித்துப் பின் கத்தியழுதல், வருந்துதல், கத்துதல் என விரிகிறது. அழு-தல் = கண்ணீர்விடுதல்; To cry, weep, புலம்பிக் கதறுதல்; To cry aloud, lament, சிணுங்குதல்; To whine, வருந்துதல்; To crave அழு > அழுகை = அழுதல்; weeping, அவலம்; Pathetic sentiment அழுகுணி = அழுகிற குணமுள்ளவ ஆள்; Tearful person, one who is always crying அழை (< அழு) = அழுகை; Crying, weeping அழு > அழை-த்தல் = கதறுதல்; To cry out, utter a loud cry அழாஅல் (< அழு) = அழுகை; Weeping, crying அழு > அழுங்கு-தல் = அழுதல்; To weep அழுங்கு > அழுங்கல் = ஆரவாரம்; Loud noise, uproar Malayalam. "aḻuka to weep, cry" aḻaykkuka "to shout, cry out" Kota. ag- (aṛt-) to weep, cry agl, akl act of lamenting Kannada. aḻ, aḻu (aḻt-, att-) "to weep, cry" aḻ, aḻu, aḻa, aḻke, arke, akke "weeping, lamenting" aḻasu, aḻisu "to make to cry" aḻuvike "crying" aḻukuḷi "an easily crying or fretful person" Tulu. arpini "to we...

கிள் * - கிளை

#கிள்: *கிள் > கிளை-த்தல் = மரம் கப்புவிடுதல்; To branch out, பெருகுதல்; To multiply as families, நெருங்குதல்; To be close, to crowd. 'கிளை' எனும் வினையடியில் பல உறவுச் சொற்கள் கிளைக்கின்றன. கிளை = கப்பு; Branch, bough, தளிர்; Sprout, shoot, bud, பூங்கொத்து; Bouquet, bunch of flowers, சுற்றம், உறவு; Kindred, relations, பகுப்பு; Section, division, இனம்; Class, group, herd, flock, shoal, company, family, horde, race. கிளை > கிளைஞர் = உறவினர்; Kinsfolk, relations, நட்பினர்; Friends, companions, மருதநிலமக்கள்; Inhabitants of an agricultural tract கிளை > கிளைமை = உறவு; Relationship கிளை > கிளையார் = நண்பர்; Friend கிளைப்பெயர் = சுற்றத்தை உணர்த்தும் பெயர்; Nouns signifying relationship * கிள் > .. > கேள் = உறவு; Kindred, relations, நட்பு; Friendship, நண்பன்; Friend, companion கேள் > கேள்மை - கேண்மை கேள் > கேளிர் = நண்பர்; Friends, சுற்றத்தார்; Relations. கேள் > கேண்மை = நட்பு; Friendship, intimacy , அருள்; Kindness, favour, benevolence, உறவு; Relation...

 ஞானம் ('Wisdom') - தமிழ்ச்சொற்கள்

 ஞானம் ('Wisdom') - எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அகக்கண். 2. அளவு. 3. அறம். 4. அறிவு. 5. அறிவை. 6. ஆற்றல். 7. ஈரம். 8. உட்கண். 9. உதிப்பு. 10. உய்த்துணர்வு. 11. ஊற்றம். 12. ஒளி. 13. ஒட்பம். 14. ஒண்மை. 15. ஓதி. 16. ஓர்ச்சி. 17. கண். 18. காஞ்சி. 19. சிதம். 20. சூழ்ச்சி. 21. தகவு. 22. தகுதி. 23. தெட்பம். 24. தெருட்சி. 25. தெருள். 26. தெளிவு. 27. புலம் 28. புலமை. 29. புலன். 30. பொறி. 31. முற்றிமை. 32. மூதுணர்வு. 33. விழி. #சொற்றொகுப்பு