#ஒணக்க #உணர்க்கை உணர்க்கை = உணர்வு; sensibility. வட்டார வழக்கில், உணர்க்கை > உணக்க/ஒணக்க எனத் திரியும். * உள் > * உண் > உணர் > உணர்க்கை உணர்-தல் = அறிதல்; To be conscious of; to know, make out, understand, உள்ளத்தால் அறிதல்; to feel. பேச்சு வழக்கில், உ > ஒ ஆவதும் இடையில் வரும் ரகர மெய் (ர்) கெடுவதும் இயல்பு. எ. கா. "அவன் ஒணக்க கெட்டவன்!" மேலும் வழக்கில், சுவையைக் குறிக்க 'ஒணக்க' என்று பயன்படுத்துவதுண்டு. அதையும் உணர்க்கை என்ற சொல்லோடு ஒப்பிடலாம். உணவை உணரும் பொருளால், உணர்க்கை > ஒணக்க என்றாகியிருக்கலாம். "Tea ஒணக்கையா இருக்கு!" "சோத்த ஒணவா செஞ்சிருக்க!" இங்கு, ஒணக்க = சுவையாக என அறியலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக