அரசர் வகை
1. ஊர்த்தலைவர்:
* குறிஞ்சித்தலைவன் பெயர்கள் - மலையன், வெற்பன், சிலம்பன், பொருப்பன், கானகநாடன். வெற்பு, சிலம்பு, பொருப்பு என்பன மலையின் பொதுப் பெயர்கள்
* முல்லைத்தலைவன் பெயர்கள் - குறும்பொறை நாடன், அண்ணல், தோன்றல்.
* மருதத்தலைவன் பெயர்கள் - ஊரன், மகிழ்நன், கிழவன்.
* பாலைத்தலைவன் பெயர்கள் - விடலை, மீளி, காளை.
* நெய்தல் தலைவன் பெயர்கள் - கொண்கன், சேர்ப்பன், துறைவன், மெல்லம்புலம்பன்.
2. நாட்டுத்தலைவர்:
* குரிசில் - பிரபு
* வேள் - குறுநில மன்னன்
*குறும்பன் - கொள்ளைத் தலைவன்
* மன்னன் - சிற்றரசன்
* கோன் அல்லது கோ - அரசன்
* வேந்தன் - முடிவேய்ந்த பேரரசன், இந்திரன்.
~ பாவாணர் (ஒரு பொருட் பல சொற்கள்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் பக். 37)
கருத்துகள்
கருத்துரையிடுக