குறிஞ்சி

 குறிஞ்சி - குறிஞ்சி பெயர்மூலம்:


குறி = அடையாளம், காலம், அளவு, தடவை.


குறி -> குறிஞ்சி 

குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்காலஅளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்த இடமும், மலைநாடு.

ஒ.நோ: நெரி -> நெரிஞ்சி -> நெருஞ்சி.

கோடைக்கானல் மலையிலும் நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள், பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும் இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும்.

ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ள குறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து, குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும் காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறு அளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம்.

~ பாவாணர் (ஐந்திணை பெயர்மூலம்: தமிழர் வரலாறு 1 பக். 100)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்