முல்லை
முல்லை - முல்லை பெயர்மூலம்:
முல் -> முன் -> முனை
முனை =
கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.
முல் -> முள்
முள் =
1. கூர்மை. "முள்வாய்ச்சங்கம்" (சிலப். 4:78).
2. கூரிய நிலைத்திணையுறுப்பு. "இளைதாக முண்மரங் கொல்க" (குறள். 879).
3. ஊசி.
4. பலாக்காய் முனை.
முள் -> முளை
முளை = கூரிய முனை. "முள்ளுறழ்முளையெயிற்று" (கலித்.4)
முல் -> முல்லை
முல்லை =
கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்தஇடமும்.
"முல்லை வைந்நுனை தோன்றவில்லமொடு" (அகம். 4:1).
என்பதில், முல்லையரும்பை வைந்நுனை என்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல்காண்க.
வை = கூர்மை.
~ பாவாணர் (ஐந்திணை பெயர்மூலம்: தமிழர் வரலாறு 1: பக். 100)
கருத்துகள்
கருத்துரையிடுக