வீட்டு வகை

* வீடு - நிலையான உறைவிடம்;

* மனை - வீட்டு நிலம் (ஆட்சிப் பொருள்);

* இல், இல்லம் - வளமான வீடு;

* அகம் - உள் வீடு;

* உறையுள் - தங்குமிடம்;

* குடிசை - தாழ்ந்த சிறு கூரைவீடு;

* குடில் - இலையால் வேய்ந்த சிறு குடிசை;

* குடிலம் - பெருங்குடில் (பர்ணசாலை);

* குடிகை - சிறு கோயில்;

* குச்சு - வீடு சிறு கூரைவீடு;

* மச்சுவீடு - மெத்தை வீடு (terrace);

* கூடு - நெற்கூடு போல் வட்டமான சிறு வீடு;

* கொட்டகை - சுவர் அல்லது நெடுஞ்சுவர் இல்லாத நீண்ட கூரைவீடு;

* கொட்டில் - தொழுவம் அல்லது ஆயுதச்சாலை;

* சாலை - பெருங்கூடம்;

* வளவு - ஒருவருக்குச் சொந்தமான பல வீடுகள் சேர்ந்த இடம்;

* வளைசல் - வீடு முதலியவற்றின் சுற்றுப்புறம் அல்லது சூழ்நிலம்;

* வளாகம் - ஆதீனம்;

* மாளிகை - மாண்பான பெருவீடு;

* மாடம் - மேனிலை;

* மாடி - மேனிலை வீடு;

* குடி - ஒரு குடும்பம் அல்லது குலம் வசிக்கும் தெரு அல்லது வீட்டுத் தொகுதி;

* அரண்மனை - அரண் அல்லது பாதுகாப்புள்ள அரசன் மனை;

* பள்ளி - படுக்கும் வீடு;

* மடம் - துறவிகள் தங்கும் பெருங்கூடம் அல்லது மண்டபம்.


~ #பாவாணர் (ஒருபொருட் பல சொற்கள்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்