குற்ற வகைகள்
* அரில் - பொருள்கள் ஒழுங்கின்றி மடங்கிக் கிடக்கும் குற்றம்
* அழுக்கு - உடம்பிலும் உடையிலும் படியும் தீநாற்ற மாசு
* ஆசு - சக்கையும் மக்கும் வைத்து ஒட்டியதுபோன்ற குற்றம்
* இழுக்கு - ஒழுக்கக்கேடு
* ஏதம் - உறுப்பறை, உயிர்க்கேடு
* கசடு - மண்டி போன்ற குற்றம்
* கரிசு - பாவம் (sin)
* கரில் - கொடுமை
* களங்கம் - கருத்தொளிப்பு
* கறை - வாழை நுங்கு முதலியவற்றின் சாற்றாலுண்டாகும் சாயம்
* குற்றம் - சட்டத்திற்கு மாறான செயல் (fault, guilt)
* குறை - தேவை அல்லது ஊனம்
* தப்பு அல்லது தப்பிதம் - சரியல்லாதது (wrongness)
* தவறு - ஒரு கடமையைச் செய்யாக் குற்றம் (failure)
* தீங்கு - இன்னல் (harm)
* தீமை - நன்மையல்லாதது (evil)
* துகள் - புழுதி போன்ற குற்றம்
* பழுது - பழமையால் வந்த கெடுதல்
* பிழை - ஒன்றிற்கு இன்னொன்றைச் சொல்லும் அல்லது கொள்ளும் குற்றம் (mistake)
* புகர் - புள்ளி போன்ற குற்றம்
* புரை - துளை போன்ற குற்றம்
* போக்கு - சேதம் அல்லது கழிவு
* மயல் - மயக்கத்திற்கிடமான குற்றம்
* மறு - மேனியிலுள்ள கரும்புள்ளி (mole) போன்ற குற்றம்
* மாசு - பொருள்களின்மேற் படியும்சிறு தூசி
* மை - கருமை
* வழு - இலக்கண நெறியினின்று விலகும் குற்றம் (error)
* வழுவாய் - பாவம்
* வடு - தழும்பு போன்ற குற்றம்
* வசை - பழிப்பாகிய குற்றம்.
~ #பாவாணர் (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)
கருத்துகள்
கருத்துரையிடுக