குள வகைகள்
குளம் - குளிக்கும் நீர்நிலை;
தெப்பக்குளம் - தெப்பத்தேர் ஓடும் குளம்;
ஊருணி - ஊரால் உண்ணப்படும் அல்லது ஊர்நடுவிலுள்ள குளம்;
ஏரி - ஏர்த்தொழிற்கு நீர்பாய்ச்சும் குளம்;
கண்வாய் - சிறு கால்வாயால் நீர் நிரம்பும் குளம்;
தடம், தடாகம் - அகன்ற அல்லது பெரியகுளம்;
கயம் - ஆழமான குளம்;
குட்டம் - குளத்தின் ஆழமான இடம்;
குட்டை - சிறு குளம்;
குண்டு - வற்றிய குளத்தில் நீர்நிறைந்த கிடங்கு;
பொய்கை - மலையடுத்த இயற்கையான குளம்;
சுனை - நீர்சுரக்கும் மலைக்குண்டு;
கிணறு - வெட்டப்பட்ட ஆழமான சிறுநீர்நிலை;
கேணி - மணற்கிணறு;
கூவல் - சிறுகிணறு;
துரவு - சுற்றுக் கட்டில்லாத பெருங்கிணறு;
மடு - அருவி விழும் கிடங்கு.
~ #பாவாணர் (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)
கருத்துகள்
கருத்துரையிடுக