பொருள் வகை

பொருள் - காட்சி, கருத்து ஆகிய இரண்டற்கும் பொதுவான பொருள்;

பண்டம் - கட்புலனானதும் கனவடிவுள்ளதுமான உயிரற்ற பொருள்;
சரக்கு - காய்ந்த பொருள்;
தாரம் - இயற்கை விளைபொருள்;
ஆக்கம் - செயற்கை விளைபொருள்;
செய்பொருள் - கையாற் செய்யப்படும் பொருள்;
உரு - கன வடிவப் பொருள்;
உருவம் - பெருங் கனவடிவப் பொருள்;
உருப்படி - தனிப்பட்டதும் உயிரற்றதும் ஒன்றன்படியுமான கனவடிவுப்பொருள் (article);
உடைமை - உடம்பிலுள்ள ஆடையணிப்பொருள்;
மதி - அளவிடப்பட்டு வரி விதிக்கப்படும் கடல் வாணிகப்பொருள் (எ-டு: ஏற்றுமதி, இறக்குமதி);
சொம் - சொந்தப் பொருள்;
சொத்து - சொந்தப் பொருட்டொகுதி (property).
செல்வம் - விலைமதிப்புள்ள பொருட்டொகுதி.
வெறுக்கை - செறிந்த செல்வம்;
காசு - தனி நாணயம் (coin);
பணம் - காசுத் தொகுதி (money).

~ #பாவாணர் (ஒருபொருட் பல சொற்கள்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்