கோப நிலைகள்

 


கோபம் - சிறிது பொழுது நிற்பது;
சினம் - நீடித்து நிற்கும் கோபம்;
சீற்றம் - சீறியெழுங் கோபம்;
வெகுளி அல்லது காய்வு அல்லது உருத்திரம் - நெருப்புத் தன்மையுள்ள கடுங்கோபம்;
கொதிப்பு - கண்போன்ற உறவினர்க்குச் செய்யப்பட்ட கொடுமை பற்றிப் பொங்கியெழுங் கோபம்;
எரிச்சல் - மனத்தை உறுத்துங் கோபம்;
கடுப்பு - பொறாமையோடு கூடிய கோபம்;
கறம் அல்லது வன்மம் - பழிவாங்குங் கோபம்;
கறுவு - தணியாக் கோபம்;
கறுப்பு - கருப்பன் முகம் கறுத்துத் தோன்றும் கோபம்;
சிவப்பு அல்லது செயிர் - சிவப்பன் முகம் சிவந்து தோன்றுங் கோபம்;
விளம் - நச்சுத் தன்மையான கோபம்;
வெறி - அறிவிழந்த கோபம்;
முனிவு - அல்லது முனைவு வெறுப்போடு கூடிய கோபம்;
கதம் -  என்றும் இயல்பான கோபம்;
கனிவு - முகஞ்சுளிக்கும் கோபம்;
செற்றம் அல்லது செறல் - பகைவனை அழிக்கும் கோபம்;
ஊடல் - மனைவி கணவனொடு கோபித்துக் கொண்டு உரையாடாத மென்கோபம்;
புலவி - ஊடலின் வளர்ந்த நிலை;
துனி - ஊடலின் முதிர்ந்த நிலை;
சடைவு - உறவினர் குறை கூறும் அமைதியான கோபம்.

~ #பாவாணர் (ஒருபொருட் பல சொற்கள்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்