இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மயிர்க்கூச்செறிதல்/Goosebumps

 மயிர்க்கூச்சு/புல்லரிப்பு (Goosebumps/Horripilation) - தமிழ்ச்சொற்கள்: 1. அருப்பம். 2. குமிழ்ப்பு. 3. குரு. 4. கொய்ப்பு. 5. கூச்சு. 6. சிலிர்ப்பு. 7. புல்லரிப்பு. 8. புளகம். 9. புளகிதம். பொருள்: மயிர்க்கூச்செறிதல்/to horripilate 1. கொய்தல். 2. சிலிர்த்தல். 3. சிலுப்புதல். 4. சிலும்புதல். 5. சிலிர்த்தல். 6. சுறுக்கொள்ளுதல். 7. புல்லரித்தல். 8. புளகித்தல். 9. மயிர்க்குச்செறிதல். 10. மயிர்க்கூச்செறிதல். 11. மயிர்பொடித்தல். #சொற்றொகுப்பு

நள்ளிரவு (Mid-night) - தமிழ்ச்சொற்கள்:

நள்ளிரவு (Mid-night) எனும் பொருட்கு இணையான தமிழ்ச்சொற்கள்: 1. அகவேளை. 2. அரைநாள். 3. அரையிரவு. 4. அரையிருள். 5. சாமம். 6. நடுச்சாமம். 7. நடுநாள். 8. நடுயாமம். 9. நள்ளிரவு. 10. பானாட்கங்குல். 11. பானாள். 12. யாமக்காலம். 13. யாமம்.

ஆராய்ச்சி (Investigation)

 'ஆராய்ச்சி' (Investigation) எனும் பொருட்கு இணையான தமிழ்ச்சொற்கள்: 1. ஆய்வு. 2. ஆர்வு. 3. ஆராய்ச்சி. 4. உசா. 5. உண்ணாட்டம் 6. ஓர்ச்சி. 7. ஓர்ப்பு. 8. குணிப்பு. 9. சூழ். 10. தெரிப்பு. 11. தேர்ச்சி. 12. நாட்டம். 13. பன்னல்  14. பூராயம். 15. வித்தி. 16. விளக்கம். #சொற்றொகுப்பு

மோர் - தமிழ்ச்சொற்கள்:

 'மோர்' ( = Butter-milk) என்ற பொருட்கு இணையான தமிழ்ச்சொற்கள்: 1. அருப்பம் 2. அளை 3. கங்கரம் 4. கலாயம் 5. கவிழம் 6. கவினம் 7. தக்கிரம் 8. தேட்டை (தெளிந்த மோர்) 9. மச்சிகை 10. மத்து 11. மதிகம் 12. மதிதம் 13. மலினம் 14. முசர் 15. மோர்