காடு/Forest - தமிழ்ச்சொற்கள்

1. அடவி.
2. அத்தம் = ஆள் வழங்காக் காடு.
3. அரணம்.
4. அரணி.
5. இயவை.
6. இளை = காவற்காடு.
7. உயவை.
8. கட்சி.
9. கடம்.
10. கடறு.
11. கடிமிளை = காவற்காடு.
12. கண்டகம்.
13. கணையம்.
14. களரி.
15. கவனம்.
16. காடு.
17. காந்தாரம்.
18. கான்.
19. கானம்.
20. கானகம்.
21. குப்பம்.
22. குவிரம்.
23. குறும்பொறை.
24. கோட்டை.
25. சித்திரம்.
26. சீரணி.
27. சுரம்.
28. செச்சை.
29. தண்ணடை.
30. தண்ணம்.
31. தில்லம்.
32. நீளிடை.
33. பழுவம்.
34. புறவு.
35. பொச்சை.
36. பொற்றை.
37. மிளை = காவற்காடு.
38. முளரி.
39. வல்லுரம்.
40. வனம்.
41. விடர்.
42. வியல்.

43. அழுவம்.

அடர்ந்த காடு/thick forest:
1. மிடைதூறு.
2. கரிசற்காடு.
3. கும்பற்காடு.

சிறுகாடு/low jungle:
1. அரில்.
2. இதள்.
3. இறும்பு.
4. குறுங்காடு.
5. சிறங்காடு.
6. தூறு.
7. தூற்றுக்காடு.
8. பொதும்பு.
9. புதல்.
10. புறவு.
11. மிளை.

சில காடுசார் சொற்கள்:
தண்கான் = இழிந்தகாடு.
பூங்காடு = இளங்காடு.
முதையல் = பழங்காடு.
வட்டை = பெருங்காடு.
வல்லை = பெருங்காடு.

#சொற்றொகுப்பு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்