கொல் - கொற்றவை

#கொற்றவை:

'கொல்' எனும் வினையடியானது, கொல்லுதல் எனும் பொருளை முதலில் குறித்துப் பின் அதனின்று கிடைக்கும் வெற்றியைக் குறித்திருக்கலாம்.

கொல் = கொலைத்தொழில்; Act of killing

*கொல் > (கொற்று) > கொற்றம் = வெற்றி; victory, வீரம்; bravery, வன்மை; strength, அரசியல்; kingship, government.
Malayalam. koṟṟam "victory, royalty"

கொற்றவை (< கொற்றவ்வை = கொற்றம் + அவ்வை) = காடுகாள், வெற்றித் தெய்வம்; the Goddess of war & victory.

கொற்றம் > கொற்றவன் = King, monarch; அரசன், Victor; வெற்றியாளன்
Malayalam. koṟṟavan "king, headman"
கொற்றி = கொற்றவை, ஒருவகை வரிக்கூத்து; A masquerade dance.

கொற்றவி = அரசி; Queen
கொற்றியார் = பிள்ளைப் பேற்றின் கடவுள்; The goddess of parturition

கொற்றவஞ்சி = பகைவரை வாளோச்சி அழித்த அரசனது புகழைப் பெருகவுரைக்கும் புறத் துறை; theme praising a king who destroyed his enemies with his sword
கொற்றவள்ளை = பகைவர் தேசம் கெடு வதற்கு வருந்துவதைக் கூறுமுகத்தான் அரசன் கீர்த்தி யைச் சொல்லும் புறத்துறை; theme praising the valor of a king by regretting for the inevitable destruction of the enemy's country at his hands, பகைவர் நாடு அழிகை; Devastation of a hostile kingdom

கொற்றக்குடை = அரசாங்கக் குடை; Umbrella, an emblem of royalty.
கொற்றமுரசு = அரசாங்கத்திற்குரிய வெற்றிமுரசு; trumpet of victory, an insignia of royalty.
கொற்றவாயில் = அரண்மனைவாயில்; portico at the entrance of a palace
கொற்றவைநிலை = கொற்றவைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை; theme of offering sacrifice to Kotravai

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்