உணர்க்கை

 #ஒணக்க #உணர்க்கை

உணர்க்கை = உணர்வு; sensibility.

வட்டார வழக்கில், உணர்க்கை > உணக்க/ஒணக்க எனத் திரியும்.

* உள் > * உண் > உணர் > உணர்க்கை

உணர்-தல் = அறிதல்; To be conscious of; to know, make out, understand, உள்ளத்தால் அறிதல்; to feel.

பேச்சு வழக்கில், உ > ஒ ஆவதும் இடையில் வரும் ரகர மெய் (ர்) கெடுவதும் இயல்பு.

எ. கா. "அவன் ஒணக்க கெட்டவன்!"

மேலும் வழக்கில், சுவையைக் குறிக்க 'ஒணக்க' என்று பயன்படுத்துவதுண்டு.

அதையும் உணர்க்கை என்ற சொல்லோடு ஒப்பிடலாம். உணவை உணரும் பொருளால், உணர்க்கை > ஒணக்க என்றாகியிருக்கலாம்.

"Tea ஒணக்கையா இருக்கு!"
"சோத்த ஒணவா செஞ்சிருக்க!"

இங்கு, ஒணக்க = சுவையாக என அறியலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்