ஊஞ்சல்
#ஊசல் #ஊஞ்சல்:
இச்சொற்கட்கு 'ஊங்கு' என்பதே அடிச்சொல்லாகக் காட்டப்படுகிறது. ஆனால், 'உய்' என்பதே அடிச்சொல்லாக இருக்கலாம் என்பது என் கருத்து.
உய்-த்தல் = செலுத்துதல்; To direct, guide.
உயல்-தல் = அசைதல்; To wave, shake.
ஊங்கு-தல்= ஆடுதல்; To swing
ஊக்கு-தல் = ஆட்டுதல்; To swing, shake
ஊக்கு > ஊகு-தல் = அசைதல்; to move, ஊசலாடுதல்; to swing.
Telugu. ū̃ku, ū̃kincu, ū̃gincu, ū̃cu, ū̃pu "to shake, move"
ū̃ka "swinging"
ū̃gu "to swing, rock, totter, be shaken or agitated"
Kolami. ūŋg-, uŋ-, ūp- "to swing"
Parji. ūñ-, ūcip-, ū̃g- "to swing"
Gondi. ūŋg-, ūṅgānā "to swing"
உஞ்சல் = ஊஞ்சல்; Swing.
ஊங்கு > (*ஊஞ்சு) > ஊஞ்சல் = ஊசல்; Swing, ஊசற்பாட்டு; Song to accompany swinging.
Malayalam. ūñcal, ūyal, ūññāl, ūññalu, iñcāla, iccāl "a swing"
Kannada. uyyal(u), uyyale, uyyālu, uyyāle, uvāle, uvvāle "a swing"
Gondi. ūyal "swing"
Tulu. ū˘yyālů, ujjālů "swing, hammock"
uccālů swing
ஊஞ்சலாடு = move to and fro; swing; முன்னும்பின்னும் அசைதல்.
ஊஞ்சல் > ஊசல் = அசைவு; Moving to and fro, ஊஞ்சல்; Swing.
Telugu. ū˘yāla, ū˘yēla, uyyā̆la, uyyē̆la, ūyala, ūyela "cradle, swing, hammock"
Kolami. u·se "a cradle"
ūp, ūse "a swing"
ஊசலாடு-தல் = ஊஞ்சலாடுதல்; To swing.
ஊசலாட்டம் = ஊஞ்சலாடுகை; Swinging.
Tulu. oyaluni "to reel, stagger"
Telugu. ū̃pu "swinging, rocking, a shake"
Gondi. ūkāṛ "a swing-cot or cradle"
ukhāṛī, ūkaṛ "cradle"
ukārī, ukhāṛī "cradle., swing"
ūmānā "to pull"
Parji. ūkip- "to cause to hang or swing"
Gadaba. ūyŋ- to swing.
ஊசல்வரி = ஊஞ்சற்பாட்டு; Song to accompany swinging.
ஒப்புநோக்கத்தக்கன:
உன்னு-தல் = [உந்து] இழுத்தல்; To pull, ஊஞ்சலுந்துதல்; To propel, எழும்புதல்; To rise.
உந்து-தல் = தள்ளுதல்; To push out, thrust forward.
துயல்-தல் = அசைதல்; To sway, wave, swing, தொங்குதல்; To hang.
துலங்கு-தல் [துளங்கு] = தொங்கியசைதல்; To hang, swing.
தூங்கு-தல் = தொங்குதல்; To hang; to be suspended, ஆடுதல்; To swing, அசைதல்; To sway from side to side, கூத்தாடுதல்; To dance.
துளங்கு-தல் = அசைதல்; To move; to sway from side to side, to shake.
துளக்கு = அசைவு; Shaking.
துளக்கம் = அசைவு; Shaking, waving, motion.
கருத்துகள்
கருத்துரையிடுக