துரப்பணம்

 #துரப்பணம்:

துரப்பணம் = Drill, Drilling Machine.

* துள் > * துர் > துர-த்தல் = To tunnel, bore; துளைத்தல்

துருவல் = துளைத்தல்; boring, drilling.
துருவு-தல் = துளைத்தல்; to bore, drill.
துருவு = தொளை; Hole.

துரப்பணம் (< துரப்பு < துர) = auger, drill, tool for boring holes; துளையிடுந் தச்சுக்கருவி.
Malayalam. turappaṇam "carpenter's drill, gimlet"

(அணம் - ஓர் ஈறு)

திறப்பணம், துருப்பணம் = a carpenter's drill, துரப்பணம்

துறப்பபணவலகு = துறப்பணக்கோலிலுள்ள ஊசி; Drill-bit.
துரப்பணக் கிணறு = நிலத்தடியிலிருந்து நீர் எடுப்பதற்காகத் தோண்டப்படும் ஆழ்குழாய்க் கிணறு; deep bore-well.

துருவலகு = தேங்காய் முதலியன துருவுங் கருவி; Scraping instrument;

துருவல்மணை, துருவுமணை, துருவுபலகை, துருவுகோல் = துருவலகு.

ஒப்புநோக்கத்தக்கன:
திருகுமணை = தேங்காய் துருவும் மணை; Coconut-scraper.
திருகூசி = ஓலையில் துளையிடுங் கருவிவகை; Drill to bore holes in an ola book.
திருகு= சுரி; Screw, swivel, முறுக்கு; Twist, wrench, அணியின் திருகுமரை; Thread of a screw.
திருகு-தல் = முறுக்குதல்; To twist, turn, wring.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்