பன்றி
#பன்றி:
'கருமை' எனும் அடிப்பொருள் கொண்டு கருநிற விலங்கான பன்றியைக் குறிக்கும் சொற்கள்:
#கருமா:
கருமா (கரு + மா) = பன்றி; Pig.
கரு - கருமை; Blackness, Dark Color
மா = விலங்கு; Animal, Beast.
#கருமான்:
கருமான் (கரு + மான்) = பன்றி; Hog.
மான் ( < மா*) = விலங்கு
#இருளி:
இருள் > இருளி = பன்றி; Pig.
இருள் = கறுப்பு; blackness, Darkness.
இருளுதல் - கருமை கவிதல்
#இருணி:
* இருளி > இருணி = பன்றி; Hog.
#மைம்மா:
மைம்மா (மை + மா) = பன்றி; Pig.
மை-த்தல் = கறுத்தல்; To become black, ஒளிமழுங்குதல் To be dim.
மை = கறுப்பு; Black, blackness.
மா = விலங்கு.
கருத்துகள்
கருத்துரையிடுக