இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விரைவு (quick) - தமிழ்ச்சொற்கள்

 'விரைவு' (quick) - இணையான தமிழ்ச்சொற்கள் 1. இரியல். 2. ஈண்டு. 3. ஓட்டம். 4. கடிது. 5. கடுகல். 6. கடுக்கம். 7. கடுப்பு. 8. கடுமை. 9. கதம். 10. கதழ். 11. கதழ்வு. 12.குடுகுடுப்பு. 13.சடக்கு. 14. சண்டம். 15. சதி. 16. சவம். 17. சவனம். 18. சுடுதிமடுதி. 19. சுள்ளாப்பு. 20. சுறுக்கு. 21. ஞெரல். 22. ஞெள்ளல். 23. தடுதாளி. 24. துக்கு. 25. துணவு. 26. துருசு. 27. துருதுருப்பு. 28. துரை. 29. துவல். 30. துவறல். 31. துனைவு. 32. தூரணம். 33. தேவை. 34. நொறில். 35. நெருநெருப்பு. 36. நொய்து. 37. நொவ்வு. 38. பரபரப்பு. 39. பறப்பு. 40. பேல். 41. மிடுமிடுப்பு. 42. முகவு. 43. முடுகல். 44. வல். 45. வாசம். 46. விசை. 47. விதப்பு. 48. விதுப்பு.  49. விரை.  50. வீகம். 51. வீச்சு. 52. வேகம். #சொற்றொகுப்பு

விரைதல் (to hasten) - தமிழ்ச்சொற்கள்

'விரைதல்' (to hasten) - எனும் பொருட்கு இணையான சில தமிழ்ச்சொற்கள்: 1. ஓடுதல். 2. கடுகுதல். 3. கடுத்தல். 4. கடுமுடுத்தல். 5. கதித்தல். 6. துண்ணெனல். 7. துவலுதல். 8. துள்ளுதல். 9. துனைதல். 10. பறத்தல். 11. பறபறத்தல். 12. மண்டுதல். 13. மலிதல். 14. மிடுமிடுத்தல். 15. முடுகுதல். 16. முறுகுதல். 17. மேற்செல்லுதல். 18. வல்விரைதல். 19. விசைதல். 20. விதும்பல். 21. விரசுதல். 22. விரைதல். 23. விறுவிறுத்தல். #முமொ #பாவாணர் #சொற்றொகுப்பு

நெருங்குதல் (to approach) - தமிழ்ச்சொற்கள்:

 'நெருங்குதல்', 'கிட்டுதல்' (to approach) எனும் பொருட்கு இணையான மேலும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அடுத்தல். 2. அண்டுதல். 3. அண்ணுதல். 4. அண்புதல். 5. அண்முதல். 6. அணாவுதல். 7. அணுகுதல். 8. அணைதல். 9. அந்தித்தல். 10. அருகுதல். 11. அருகுறல். 12. அருவுதல். 13. அள்ளுதல். 14. இடுக்குதல். 15. இடுகுதல். 16. உறுதல். 17. எய்துதல். 18. கண்ணுறுதல். 19. கிட்டுதல். 20. குறுகுதல். 21. கெழுமுதல். 22. கையுறுதல். 23. கைகூடுதல். 24. சிவணுதல். 25. செல்லுதல். 26. தன்னுதல். 27. துறுதல். 28.  துன்றுதல். 29. துன்னுதல். 30. தூர்தல். 31. தோய்தல். 32. நணுகுதல். 33. நள்ளுதல். 34. நெரித்தல். 35. நெருங்குதல். 36. புடைப்படுதல். 37. மண்டுதல். 38. மருவுதல். 39. முட்டுதல் 40. முண்டுதல். 41. முன்னுதல். 42. மேல்வாதல். 43. விரவுதல். #முமொ

வையும் வகைகள்:

  ஏசுதல் - ‘வாங்கிக் குடித்தவன்’, ‘இரப்பெடுத்தவன்’ என வறுமை நிலையைச் சொல்லிப் பழித்தல்; திட்டுதல் - ‘நாய்’, ‘பேய்’ என அஃறிணைப் பெயரைச் சொல்லிப் பழித்தல்; வைதல் - இடக்கர்ச் சொற்களைச் சொல்லிப் பழித்தல்; பழித்தல் - பலர் முன் இழுக்கமான செய்திகளைச் சொல்லி அவமானப்படுத்துதல்; சாவித்தல் - ‘நீ மண்ணாய்ப் போக’, ‘நீ நாசமாய்ப் போக’ எனச் சபித்தல். ~ #பாவாணர்

Sun - தமிழ்ச்சொற்கள்

 1. அலரி 2. அரி 3. அரிணன் 4. அருணன் 5. அவி 6. அழலவன் 7. அழலோன் - இ 8. அழற்கதிர் - இ 9. அனலி 10. ஆதவன் - இ 11. ஆம்பலரி 12. ஆயிரக்கதிரன் 13. ஆயிரக்கதிரோன் - இ 14. ஆழ்வான் 15. இருட்பகை - இ 16. இருள்வலி - இ 17. இனன் 18. ஈரிலை 19. உச்சிக்கிழான் - இ 20. உதயன் - இ 21. எரிகதிர் 22. எல் - இ 23. எல்லவன் - இ 24. எல்லி 25. எல்லை 26. எல்லோன் 27. என்றவன் - இ 28. என்றூழ் - இ 29. ஒருசுடர் 30. ஒள்ளியோன் 31. ஒளி 32. ஒளியவன் - இ 33. கடுங்கதிர் - இ 34. கதிரவன் - இ 35. கனலி - இ 36. கனலோன் - இ 37. குடக்கோடுவான் 38. குதபன் 39. கோன் 40. சான்றோன் 41. சுடர் - இ 42. சுரன் 43. சூரன் - இ 44. சூரி 45. செங்கதிர் 46. செஞ்சுடர் 47. செம்பரிதி - இ 48. செய்யவன் 49. செய்யோன் - இ 50. திகிரி - இ 51. திமிராரி 52. நாயிறு 53. பகல்செய்வோன் - இ 54. பகலரசு - இ 55. பகலோன் - இ 56. பகவன் 57. பரிதி - இ 58. பாது 59. புலரி - இ 60. பேரு 61. பேரொளி 62. பேனன் 63. பொழுது - இ 64. போது 65. மண்டிலம் - இ 66. மணி 67. மணிமான் 68. மந்தி - இ 69. மாலி 70. வாணாளளப்போன் - இ 71. வான்கண் - இ 72. வான்மணி - இ 73. வான்விளக்கம் 74. வானவன் - இ 75. விண்ம...

கோப நிலைகள்

  கோபம் - சிறிது பொழுது நிற்பது; சினம் - நீடித்து நிற்கும் கோபம்; சீற்றம் - சீறியெழுங் கோபம்; வெகுளி அல்லது காய்வு அல்லது உருத்திரம் - நெருப்புத் தன்மையுள்ள கடுங்கோபம்; கொதிப்பு - கண்போன்ற உறவினர்க்குச் செய்யப்பட்ட கொடுமை பற்றிப் பொங்கியெழுங் கோபம்; எரிச்சல் - மனத்தை உறுத்துங் கோபம்; கடுப்பு - பொறாமையோடு கூடிய கோபம்; கறம் அல்லது வன்மம் - பழிவாங்குங் கோபம்; கறுவு - தணியாக் கோபம்; கறுப்பு - கருப்பன் முகம் கறுத்துத் தோன்றும் கோபம்; சிவப்பு அல்லது செயிர் - சிவப்பன் முகம் சிவந்து தோன்றுங் கோபம்; விளம் - நச்சுத் தன்மையான கோபம்; வெறி - அறிவிழந்த கோபம்; முனிவு - அல்லது முனைவு வெறுப்போடு கூடிய கோபம்; கதம் -  என்றும் இயல்பான கோபம்; கனிவு - முகஞ்சுளிக்கும் கோபம்; செற்றம் அல்லது செறல் - பகைவனை அழிக்கும் கோபம்; ஊடல் - மனைவி கணவனொடு கோபித்துக் கொண்டு உரையாடாத மென்கோபம்; புலவி - ஊடலின் வளர்ந்த நிலை; துனி - ஊடலின் முதிர்ந்த நிலை; சடைவு - உறவினர் குறை கூறும் அமைதியான கோபம். ~ #பாவாணர் (ஒருபொருட் பல சொற்கள்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)

உட்கொள்ளுதல் வகைகள்

  அசைத்தல் - விலங்கு போல் அசையிட்டுத் தின்னுதல்; அதுக்குதல் - சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறிமாறி  ஒதுக்குதல்; அரித்தல் - பூச்சி புழுப்போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்; அருந்துதல் - சிறிதுசிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல்; ஆர்தல் - வயிறு நிரம்ப வுண்ணுதல்; உண்ணுதல் - எதையும் உட்கொள்ளுதல்; உதப்புதல் (குதப்புதல்) - வாயினின்று வெளிவரும்படி மிகுதியாய்ச் சவைத்தல்; உறிஞ்சுதல் - ஒன்றிலுள்ள நீரை வாயால் உள்ளிழுத்தல்; ஒதுக்குதல் - ஒரு கன்னத்தில் அடக்குதல்; கடித்தல் - கடினமானதைப் பல்லால் உடைத்தல்; கரும்புதல் - ஒரு பொருளின் ஓரத்தில் சிறிது சிறிதாய்க் கடித்தல்; கறித்தல் - மெல்லக் கடித்தல்; குடித்தல் - கலத்திலுள்ள நீரைப் பொதுவகையில் வாயிலிட்டு உட்கொள்ளுதல்; குதட்டுதல் - கால்நடை போல் அசையிட்டு வாய்க்கு வெளியே தள்ளுதல்; கொறித்தல் - ஒவ்வொரு கூலமணியாய்ப் பல்லிடை வைத்து உமியைப் போக்குதல்; சப்புதல் - சவைத்து ஒன்றன் சாற்றை உட்கொள்ளுதல்; சவைத்தல் - வெற்றிலை புகையிலை முதலியவற்றை மெல்லுதல்; சாப்பிடுதல் - சோறுண்ணுதல்; சுவைத்தல் - ஒன்றன் சுவையை நுகர்தல்; சூப்புதல் - கடினமான...