இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொல்லும் வகைகள்

* அசைத்தல் - அசை பிரித்துச் சொல்லுதல்; * அறைதல் - உரக்கச் சொல்லுதல்; * இசைத்தல் - கோவைபடச் சொல்லுதல்; * இயம்புதல் - இயவொலியுடன் சொல்லுதல்; * உரைத்தல் - செய்யுட்கு உரை சொல்லுதல்; * உளறுதல் - அச்சத்தினால் ஒன்றிற்கு இன்னொன்றைச் சொல்லுதல்; * என்னுதல் - ஒரு செய்தியைச் சொல்லுதல்; * ஓதுதல் - காதில் மெல்லச் சொல்லுதல்; * கரைதல் - அழுது அல்லது அழைத்துச் சொல்லுதல்; * கழறுதல் - கடிந்து சொல்லுதல்; * கிளத்தல் - ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்; * குயிற்றுதல் - குயிற் குரலிற் சொல்லுதல்; * குழறுதல் - நாத்தடுமாறிச் சொல்லுதல்; * கூறுதல் - கூறுபடுத்துச் சொல்லுதல்; * கொஞ்சுதல் - செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்; * சாற்றுதல் - அரசனாணையைக் குடிகளுக்கறிவித்தல் (proclamation);* * செப்புதல் - வினாவிற்கு விடை சொல்லுதல்; * சொல்லுதல் - இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்; * நவிலுதல் - பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்; * நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்; * நுவலுதல் - நூலைக் கற்பித்தல்; * நொடித்தல் - கதை சொல்லுதல்; * பகர்தல் - பகிர்ந்து விலை கூறுதல்; * பலுக்குதல் - உச்சரித்தல்; * பறைதல் - ஒன்றைத் தெரிவித்தல்; * ...

வீட்டு வகை

* வீடு - நிலையான உறைவிடம்; * மனை - வீட்டு நிலம் (ஆட்சிப் பொருள்); * இல், இல்லம் - வளமான வீடு; * அகம் - உள் வீடு; * உறையுள் - தங்குமிடம்; * குடிசை - தாழ்ந்த சிறு கூரைவீடு; * குடில் - இலையால் வேய்ந்த சிறு குடிசை; * குடிலம் - பெருங்குடில் (பர்ணசாலை); * குடிகை - சிறு கோயில்; * குச்சு - வீடு சிறு கூரைவீடு; * மச்சுவீடு - மெத்தை வீடு (terrace); * கூடு - நெற்கூடு போல் வட்டமான சிறு வீடு; * கொட்டகை - சுவர் அல்லது நெடுஞ்சுவர் இல்லாத நீண்ட கூரைவீடு; * கொட்டில் - தொழுவம் அல்லது ஆயுதச்சாலை; * சாலை - பெருங்கூடம்; * வளவு - ஒருவருக்குச் சொந்தமான பல வீடுகள் சேர்ந்த இடம்; * வளைசல் - வீடு முதலியவற்றின் சுற்றுப்புறம் அல்லது சூழ்நிலம்; * வளாகம் - ஆதீனம்; * மாளிகை - மாண்பான பெருவீடு; * மாடம் - மேனிலை; * மாடி - மேனிலை வீடு; * குடி - ஒரு குடும்பம் அல்லது குலம் வசிக்கும் தெரு அல்லது வீட்டுத் தொகுதி; * அரண்மனை - அரண் அல்லது பாதுகாப்புள்ள அரசன் மனை; * பள்ளி - படுக்கும் வீடு; * மடம் - துறவிகள் தங்கும் பெருங்கூடம் அல்லது மண்டபம். ~ #பாவாணர் (ஒருபொருட் பல சொற்கள்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)

குற்ற வகைகள்

 * அரில் - பொருள்கள் ஒழுங்கின்றி மடங்கிக் கிடக்கும் குற்றம்  * அழுக்கு - உடம்பிலும் உடையிலும் படியும் தீநாற்ற மாசு  * ஆசு - சக்கையும் மக்கும் வைத்து ஒட்டியதுபோன்ற குற்றம்  * இழுக்கு - ஒழுக்கக்கேடு  * ஏதம் - உறுப்பறை, உயிர்க்கேடு  * கசடு - மண்டி போன்ற குற்றம்  * கரிசு - பாவம் (sin)  * கரில் - கொடுமை  * களங்கம் - கருத்தொளிப்பு  * கறை - வாழை நுங்கு முதலியவற்றின் சாற்றாலுண்டாகும் சாயம்  * குற்றம் - சட்டத்திற்கு மாறான செயல் (fault, guilt)  * குறை - தேவை அல்லது ஊனம்  * தப்பு அல்லது தப்பிதம் - சரியல்லாதது (wrongness)  * தவறு - ஒரு கடமையைச் செய்யாக் குற்றம் (failure)  * தீங்கு - இன்னல் (harm)  * தீமை - நன்மையல்லாதது (evil)  * துகள் - புழுதி போன்ற குற்றம்  * பழுது - பழமையால் வந்த கெடுதல்  * பிழை - ஒன்றிற்கு இன்னொன்றைச் சொல்லும் அல்லது கொள்ளும் குற்றம் (mistake)  * புகர் - புள்ளி போன்ற குற்றம்  * புரை - துளை போன்ற குற்றம்  * போக்கு - சேதம் அல்லது கழிவு  * மயல் - மயக்கத்திற்கிடமான குற...

ஒலி வகைகள்

* அரவம் - பொதுவான ஒலி  * குரல் - தொண்டையொலி * இசை - இனிய ஒலி * ஒலி - எழுத்தொலி * கூச்சல் - பலர்கூடிக் கத்துமொழி * பூசல் - சண்டையிலும் போரிலும் கேட்கும் ஒலி * முழக்கம் - இடியாலும் பறையாலும் உண்டாகும் பேரொலி * ஓசை - சொற்றொடர் அல்லது பாட்டொலி * ஆரவாரம் - பெரிய ஊர்வலத்தில் கேட்கும் பல் இயவொலி * இரைச்சல் மழை அருவி சந்தைக்கூட்டம் முதலியவற்றின் பேரொலி * ஆர்ப்பு - மாபெருங் கூட்டத்தின் வாழ்த்து அல்லது கண்டன வொலி * சிலம்பு - எதிரொலி * சிலை - பாடும்போது கலகலவென்றிலங்கும் ஒலி * சந்தடி - விழா நிகழிடத்திலும் மாநகர வீதியிலும், பல்வேறு கவனமுள்ள மக்கள் தொழிலாலுண்டாகும் ஒலி * சந்தம் - அசையொத்த அடிகளைக் கொண்ட பாட்டொலி * வண்ணம் - எழுத்தொத்த அடிகளைக் கொண்ட பாட்டொலி ~ #பாவாணர் (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)

மரக்கல வகை

* புணை - நீரில் மிதக்கும் கட்டை * தெப்பம் - பல மிதப்புக் கட்டைகளின் சேர்க்கை * கட்டுமரம் - இருகடையும் வளைந்த மரக்கட்டு * தோணி - தோண்டப்பட்ட மரம் போல்வது * ஓடம் - வேகமாய்ச் செல்லும் தட்டையான தோணி * திமில் - திரண்ட மீன்படகு * பஃறி - பன்றி போன்ற வடிவமுள்ள தோணி * பரிசில் - வட்டமான பிரம்புத் தோணி; * அம்பி - விலங்குமுகம் அல்லது பறவை முகம் போன்ற முகப்பையுடைய மரத்தோணி * படகு - பாய் கட்டிய தோணி * நாவாய் - நீரைக் கொழித்துச் செல்லும் போர்க்கலம் * கப்பல் - பலவாய் கட்டி வணிகச் சரக்கேற்றிச் செல்லும் பெருங்கலம் ~ #பாவாணர் (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)

Beauty - தமிழ்ச்சொற்கள் (சொற்றொகுப்பு)

'Beauty' (அழகு/எழில்) எனும் பொருட்கு இணையான தமிழ்ச்சொற்கள் 1. அஞ்ஞை. 2. அணி. 3. அந்தம். 4. அம். 5. அமை. 6. அரண். 7. அலரி. 8. அழகு. 9. ஆய்வு. 10. ஆரி. 11. ஆரியம். 12. இலக்கணம். 13. ஈரம். 14. உருவம். 15. எழில். 16. ஐஞ்ஞை. 17. ஐது. 18. ஐன். 19. ஒட்பம். 20. ஒண்மை. 21. ஒப்பு. 22. ஒள். 23. ஓவியம். 24. கதிரம். 25. கமை. 26. கலிகி. 27. கவர்ச்சி. 28. கவின். 29. கவினல். 30. காமர். 31. குழகு. 32. கொம்மை. 33. கொழுமை. 34. கோப்பு = அமைப் பழகு;. 35. கோமலம். 36. கோலம். 37. சந்தம். 38. சவி. 39. சாயல். 40. சார். 41. சாரு. 42. சித்திரம். 43. சீர். 44. செம்மை. 45. செல்வம். 46. செல்வு. 47. செவ்வி. 48. செழுமை. 49. சேடு. 50. சொக்கம். 51. சொக்கு. 52. தகைமை. 53. திரு. 54. தீத்தி. 55. துப்பு. 56. துப்புரவு. 57. தென். 58. தையல் = கட்டழகு. 59. தோட்டி = கட்டழகு. 60. நலம். 61. நவ்வி. 62. நன்கு. 63. நன்மை. 64. நாட்டம். 65. நீர்மை. 66. நேத்தி. 67. நோக்கம். 68. பகரம். 69. பகாரம். 70. பசுமை. 71. பரேர். 72. பாங்கு. 73. புனைவு. 74. பூங்கற்று. 75. பை. 76. பொலம். 77. பொலிவு. 78. பொற்பு. 79. போக்கம். 80. மஞ்சு. 81. ம...

ஊர் பெயர்கள்

மக்கள் மலை (குறிஞ்சி), காடு (முல்லை), நாடு (மருதம்), பாலை, கடற்கரை (நெய்தல்) என்னும் ஐந்திடங்களில் வேறு வேறு வாழ்ந்து வந்த பண்டைக்காலத்தில், குறிஞ்சி நிலத்து ஊர்கள் குறிச்சி, சிறுகுடி என்றும், முல்லை நிலத்து ஊர்கள் பாடி, சேரி என்றும், மருத நிலத்து ஊர்கள் ஊர் என்றும், பாலை நிலத்து ஊர்கள் பறந்தலை என்றும், நெய்தல் நிலத்து ஊர்கள் பாக்கம், பட்டினம் என்றும் ஈறுகொடுத்துக் கூறப்பட்டன. மக்கள் பல்கித் திணைமயக்கம் உண்டானபின், இவ் வழக்கம் பெரும்பாலும் நின்றுவிட்டது. இடைக்காலத்தில் வழங்கிய சில ஊர்ப்பெயர்களும் ஊர்ப் பெயரீறுகளும் வெவ்வேறு காரணம் பற்றியவை.  ஆறை என்பது ஆற்றூர். புத்தூர் என்பது புதியவூர்; மூதூர் என்பது பழையவூர்; பேரூர் என்பது மாநகர்; பட்டி என்பது கால்நடைத் தொழுவமுள்ள சிற்றூர்; பற்று என்பது தனிப்பட்டவர்க்கு அல்லது ஒரு சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; அடங்காப்பற்று என்பது அரசனாணைக் கடங்காதவர் வசிக்கும் ஊர்; பள்ளி என்பது பௌத்த சமண மடமுள்ள ஊர்; பாளையம் என்பது படையிருக்கும் ஊர்; பட்டு என்பது பாளையத் தலைவரான சிற்றரசர்க்கு விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; மங்க...

Love - தமிழ்ச்சொற்கள் (சொற்றொகுப்பு)

 பொருள்: Love (காதல், அன்பு) சொற்கள்: 1. அமர் - இ 2. அளி - இ 3. அன்பு - இ 4. ஆணம் - இ 5. ஆணு - இ 6. ஆத்தம்  7. ஆதரம் - இ 8. ஆதரவு 9. ஆயத்தி 10. ஆர்வம் - இ 11. ஆர்வலித்தல் - இ 12. ஆராமை - இ 13. இளகல் 14. ஈரம் - இ 15. உப்பு 16. உம்முதல் - இ 17. உரங்காட்டுதல் 18. உரிமை - இ 19. உருக்கம் - இ 20. உவகை - இ 21. உவப்பு  22. உவவு 23. உழுவல் - இ 24. உறவு - இ 25. கக்குலத்தை 26. கசனை - இ 27. கனி - இ 28. கனிகரம் 29. கனிவு - இ 30. காதல் 31. காதன்மை - இ 32. ஞேயம் 33. தட்பம் - இ 34. தண் - இ 35. துவக்கு 36. தொழுதகுதல் - இ 37. நச்சுதல் - இ 38. நசைதல் - இ 39. நண்பு - இ 40. நத்துதல்  41. நயத்தல் 42. நயப்பு - இ 43. நயம் - இ 44. நல்கல் - இ 45. நலம் - இ 46. நற்காமம் 47. நள்ளுதல் 48. நார் - இ 49. நாரம் - இ 50. நிணறு 51. நெஞ்சம் - இ 52. நே - இ 53. நேசம் - இ 54.  நேசித்தல் - இ 55. நேசிப்பு 56. நேம் 57. நேயம் - இ 58. நேர்ச்சி - இ 59. பக்கம் - இ 60. பசை - இ 61. பசைவு 62. பரிதல் - இ 63. பரிவு - இ 64. பற்று - இ 65. பாசம் - இ 66. புரிவு - இ 67. பூணுதல் - இ 68. பெட்பு 69. மதனம்  70. மாதர் ...

Desire -தமிழ்ச்சொற்கள் (சொற்றொகுப்பு)

 பொருள்: Desire (விருப்பம், வேட்கை)  சொற்கள்: 1. அணங்குதல் 2. அமர் - இ 3. அலத்தல்  4. அவா 5. அவாவுதல் - இ 6. அளி -இ 7. அறுபகை - இ 8. ஆசித்தல் - இ 9. ஆசை - இ 10. ஆதரம் 11. ஆதல் 12. ஆர்த்தி 13. ஆர்வம் - இ 14. ஆர்வலித்தல் 15. ஆர்வு - இ 16. ஆவல் - இ 17. ஆவுதல் - இ 18. இச்சித்தல்  19. இச்சை 20. இட்டு 21. இவர்தல் - இ 22. இவறுதல் - இ 23. ஈடணம் 24. உகளம் 25. உம்முதல் - இ 26. உவ்வுதல் 27. உவகை - இ 28. உவப்பு - இ 29. உவவு  30. உள்ளக்கிடக்கை 31. உறவு - இ 32. எசறவு - இ 33. ஏக்கறுதல் - இ 34. ஏக்கு 35.  ஏசறு - இ 36. ஏடனை - இ 37. ஏடை 38. ஏமாத்தல் - இ 39. கண்ணயத்தல் - இ 40. கருடல்  41. கருத்து - இ 42. கவர்தல் - இ 43. கவவுதல் - இ 44. கவற்சி - இ 45. காங்கிசை - இ 46. காதல் - இ 47. காதலி - இ 48. காதன்மை - இ 49. காமம் - இ 50. காமர் - இ 51. குதுகுதுப்பு - இ 52. கெலிப்பு 53. கோருதல் 54. சிந்தித்தல் - இ 55. சீந்துதல் 56. சோட்டை - இ 57. துயக்கு - இ 58. தேவை - இ 59. தொழுதகுதல் - இ 60. தோட்டம் - இ 61. நச்சுதல் - இ 62. நசைதல் - இ 63. நத்துதல் - இ 64. நம்பல் 65. நயத்தல் 66. நயம் 6...