#ஊசல் #ஊஞ்சல்: இச்சொற்கட்கு 'ஊங்கு' என்பதே அடிச்சொல்லாகக் காட்டப்படுகிறது. ஆனால், 'உய்' என்பதே அடிச்சொல்லாக இருக்கலாம் என்பது என் கருத்து. உய்-த்தல் = செலுத்துதல்; To direct, guide. உயல்-தல் = அசைதல்; To wave, shake. ஊங்கு-தல்= ஆடுதல்; To swing ஊக்கு-தல் = ஆட்டுதல்; To swing, shake ஊக்கு > ஊகு-தல் = அசைதல்; to move, ஊசலாடுதல்; to swing. Telugu. ū̃ku, ū̃kincu, ū̃gincu, ū̃cu, ū̃pu "to shake, move" ū̃ka "swinging" ū̃gu "to swing, rock, totter, be shaken or agitated" Kolami. ūŋg-, uŋ-, ūp- "to swing" Parji. ūñ-, ūcip-, ū̃g- "to swing" Gondi. ūŋg-, ūṅgānā "to swing" உஞ்சல் = ஊஞ்சல்; Swing. ஊங்கு > (*ஊஞ்சு) > ஊஞ்சல் = ஊசல்; Swing, ஊசற்பாட்டு; Song to accompany swinging. Malayalam. ūñcal, ūyal, ūññāl, ūññalu, iñcāla, iccāl "a swing" Kannada. uyyal(u), uyyale, uyyālu, uyyāle, uvāle, uvvāle "a swing" Gondi. ūyal "swing" Tulu. ū˘yyālů, ujjālů "swing, hammock" uccā...