இடுகைகள்

உளவாளி (Spy) - தமிழ்ச்சொற்கள்:

உளவாளி (Spy) எனும் பொருட்படும் சில தமிழ்ச்சொற்கள் :   1. உசா . 2. உள்ளாள் . 3. உளவன் . 4. உளவாள் . 5. உளவாளி . 6. ஊடாளர் . 7. ஒற்றர் . 8. ஒற்றார் . 9. ஒற்று . 10. ஒற்றுவர் . 11. கொம்பாள் . 12. துப்பர் . 13. துப்பாள் . 14. பாடி . 15. முன்னோடி . 16. வேய் . 17. வேவாள் .   # சொற்றொகுப்பு

சிறுதுயில் (Nap) - தமிழ்ச்சொற்கள்

சிறுதுயில் (Nap) எனும் பொருட்படும் சில தமிழ்ச்சொற்கள்: 1. சிறுதுயில். 2. பிணி. 3. மென்பிணி. #சொற்றொகுப்பு

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

ஞாயிறுமறைவு (Sunset) எனும் பொருட்படும் சில தமிழ்ச்சொற்கள்: 1. ஞான்றஞாயிறு. 2. நாளெல்லை. 3. பட்டபோது. 4. படுபொழுது. 5. பொழுசாய்தல். 6. பொழுதுசாய்தல். 7. பொழுதிறங்குதல். 8. பொழுதுபடுதல். 9. பொழுதுபுகுதல். 10. பொழுதுபூதல். 11. பொழுதுபோதல். 12. போதுபடுதல். #சொற்றொகுப்பு

ஞாயிறு (Sun) - தமிழ்ச்சொற்கள்

 ஞாயிறு (Sun) - எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அரி. 2. அல். 3. அலரி. 4. அழலவன். 5. அழலோன். 6. அழற்கதிர். 7. அனலி. 8. ஆதி. 9. ஆம்பலரி. 10. ஆரியன். 11. ஆழ்வான். 12. இனன். 13. இருட்பகை. 14. இருள்வலி. 15. ஈரிலை. 16. உச்சிக்கிழான். 17. ஊழ். 18. எரிகதிர். 19. எல். 20. எல்லவன். 21. எல்லி. 22. எல்லிப்பகை. 23. எல்லினான். 24. எல்லை. 25. எல்லோன். 26. என்றவன். 27. என்று. 28. என்றூழ். 29. ஏழ்பரியோன். 30. ஒருசுடர். 31. ஒள்ளியோன். 32. ஒளி. 33. ஒளியவன். 34. ஒளியோன். 35. க. 36. கடுங்கதிர். 37. கதிர்க்கடவுள் . 38. கதிரவன். 39. கதிரோன். 40. கனலி. 41. கனலோன். 42. குடக்கோடுவான். 43. கோ. 44. கோன். 45. சான்றோன். 46. சுடர். 47. சுரன். 48. சூரன். 49. சூரி. 50. செங்கதிர். 51. செஞ்சுடர். 52. செம்பரிதி. 53. செய்யவன். 54. செய்யோன். 55. ஞாயிறு. 56. திகிரி. 57. திமிராரி. 58. தேரோன். 59. நாயிறு. 60. பகல். 61. பகல்செய்வான். 62. பகலரசு. 63. பகலோன். 64. பகவன். 65. பரிதி. 66. பனிப்பகை. 67. பனிப்பகைவன். 68. புலரி. 69. பேரொளி. 70. பொழுது. 71. பொன். 72. மண்டிலம். 73. மணி. 74. மணிமான். 75. மந்தி. 76. மாலி. ...

குதிரை (Horse) - தமிழ்ச்சொற்கள்

 குதிரை (Horse) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அரி. 2. இவுளி. 3. உன்னி. 4. ஒருத்தல். 5. கண்ணுகம். 6. கந்துகம். 7. கனவட்டம். 8. கிள்ளை. 9. குதிரை. 10. கூந்தன்மா. 11. கொக்கு. 12. கோணம். 13. சாமரி. 14. தூசி. 15. தூளி. 16. நம்பிரான். 17. பரி. 18. பாடலம். 19. பானல். 20. பாய்மா. 21. புரவி. 22. புருவம். 23. புள்ளியன்மா. 24. புள்ளியற்கலிமா. 25. மண்டிலம். 26. மா. 27. வன்னி. 28. வாமான். 29. விடலம். 30. விடை. 31. வீதி.   #சொற்றொகுப்பு

மூங்கில் (Bamboo) - தமிழ்ச்சொற்கள்

மூங்கில் (Bamboo) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அம்பு. 2. அமை. 3. அரி. 4. அரில். 5. அறியல். 6. ஆம்பல். 7. ஓங்கல். 8. கண். 9. கணை. 10. கழாய். 11. கழை. 12. கழிக்கோல். 13. காம்பு. 14. கார்முகம். 15. கிளை. 16. குலம். 17. கெடை. 18. சவம். 19. சிதறி. 20. சினை. 21. சேய். 22. தட்டை. 23. தடம். 24. தண்டு. 25. திகிரி. 26. துளை. 27. தூம்பு. 28. தொளை. 29. தோல். 30. நாலிகை. 31. நெட்டில். 32. நெடில். 33. நெத்தில். 34. நெதில். 35. நேடி. 36. பணை. 37. பரசு. 38. பாசு. 39. பாண்டில். 40. பாதிரி. 41. பிரம்பு. 42. புணை. 43. போல். 44. முடங்கல். 45. முத்துளம். 46. முந்தூழ். 47. முளை. 48. மூங்கில். 49. வங்கியம். 50. வயிர். 51. வரை. 52. வாரை. 53. விண்டல். 54. விண்டு. 55. விண்பகல். 56. வெதிர். 57. வெதிரி. 58. வெதிரம். 59. வேய். 60. வேயல். 61. வேர். 62. வேரல். 63. வேல். 64. வேழம். #சொற்றொகுப்பு

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

கொற்றவைக்கு (Kotravai) வழங்கப்படும் சில தமிழ்ப்பெயர்கள்: 1. அங்கம்மா. 2. அங்காளம்மை. 3. அங்காளி. 4. அம்பணத்தி. 5. அம்மன். 6. அம்மை. 7. அமரி. 8. அரியேறி. 9. ஆரி. 10. ஆரியை. 11. ஆளியூர்தி. 12. இகன்மகள். 13. இறைமகள். 14. இறைவி. 15. எரிபிடாரி. 16. ஐ. 17. ஐயை. 18. கலையூர்தி. 19. கன்னி. 20. கன்னிகை. 21. காடமர்செல்வி. 22. காடுகிழவோள். 23. காடுகிழாள். 24. காடுகெழுசெல்வி. 25. காளி. 26. குமரி. 27. கைதவை. 28. கொலைமகள். 29. கொற்றவை. 30. கொற்றி. 31. கோடவி. 32. சண்டி. 33. சமரி. 34. நீலி. 35. பழையோள். 36. பாலைக்கிழத்தி. 37. போர்மடந்தை. 38. மடங்கலூர்தி. 39. மாகாளி. 40. மாயவள். 41. மாயி. 42. மாயை. 43. மாரி. 44. முக்கண்ணி. 45. மூதணங்கு. 46. மூதை. 47. மோடி 48. யாளியூர்தி. 49. வல்லணங்கு. 50. வலவை. 51. வாட்படையாள். 52. வாள்கைக்கொண்டாள். 53. வாளுழத்தி. 54. வாளேந்தி. 55. வீரச்செல்வி. 56. வீரி. #சொற்றொகுப்பு

தோல் (Skin) - தமிழ்ச்சொற்கள்

தோல் (Skin) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அதள். 2. உரி. 3. உரிவை. 4. ஒலியல். 5. துக்கு. 6. துவக்கு. 7. தொக்கு. 8. தொலி. 9. தோடு. 10. தோல். 11. நிறம். 12. பச்சை. 13. புரணி. 14. புரம். 15. புறணி. 16. புறவம். 17. புனிறு. 18. பூட்கை. 19. பொருக்கு. 20. போர்வை. 21. வக்கு. 22. வடகம். 23. வடகு. 24. வார். #சொற்றொகுப்பு

நிழல் (Shadow) - தமிழ்ச்சொற்கள்

நிழல் (Shadow) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. சாயல். 2. சாயை. 3. நிழல். 4. நீழல். 5. பா. #சொற்றொகுப்பு

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

 முருகனுக்கு (Murugan) வழங்கப்படும் சில தமிழ்ப்பெயர்கள்: 1. அயிலவன். 2. அயிலான். 3. அரன்மகன். 4. அறுமுகன். 5. அறுமீன்காதலன். 6. ஆண்டி. 7. ஆறுமுகம். 8. ஆறுமுகவன். 9. ஆசான். 10. ஆடூர்ந்தோன். 11. ஆண்டலைக்கொடியோன். 12. ஆறுமுகன். 13. இளையபிள்ளையார். 14. இளையவன். 15. இளையோன். 16. இறைக்காசான். 17. கடம்பன். 18. கந்தன். 19. கலையறிபுலவன். 20. குமரவேள். 21. குமரன். 22. குழகன். 23. குளகன். 24. குறிஞ்சிக்கிழவன். 25. குறிஞ்சிக்கிறைவன். 26. குறிஞ்சிமன். 27. குறிஞ்சிவேந்தன். 28. குன்றெறிந்தோன். 29. கோழிக்கொடியோன். 30. சித்தன். 31. சிலம்பன். 32. சுரர். 33. செந்தி. 34. செந்தில். 35. செவ்வேள். 36. சேந்தன். 37. சேய். 38. சேயவன். 39. சேயான். 40. சேயோன். 41. பவளவடிவன். 42. பழனியாண்டி. 43. பழனிவேலன். 44. பிள்ளையார். 45. புலவன். 46. பெருவிறல். 47. மதவலி. 48. மயிலாளி. 49. முதல்வன்சேய். 50. முருகவேள். 51. முருகன். 52. முருகு. 53. வடிவேல். 54. வேலன். 55. வேள். #சொற்றொகுப்பு

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

செவ்வாய் (The Planet Mars) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அறிவன். 2. அழல். 3. அழலவன். 4. அழலோன். 5. ஆர். 6. ஆரல். 7. குருதி. 8. செம்மீன். 9. செய்யவன். 10. செய்யோன். 11. செவ்வாய். 12. சேய். 13. சேயவன். 14. தரைமகன். 15. நிலமகன். 16. போரேறு. 17. மங்கலன். #சொற்றொகுப்பு

சிவன் - தமிழ்ப்பெயர்கள்

சிவனுக்கு (Siva) வழங்கப்படும் சில தமிழ்ப்பெயர்கள்: 1. அகத்தரையர். 2. அங்கணன். 3. அங்கணாளன். 4. அண்ணல். 5. அத்தன். 6. அந்தணன். 7. அனலாடி. 8. அம்பலக்கூத்தன். 9. அம்பலத்தாடி. 10. அம்பலவன். 11. அம்பலவாணன். 12. அரவணிந்தார். 13. அரவணிந்தோன். 14. அரவன். 15. அருள்வடிவன். 16. அழலாடி. 17. அழலிடமேந்தி. 18. அழலேந்தி. 19. அழனிறக்கடவுள். 20. அழற்கண்ணன். 21. ஆட்டுக்கோன். 22. ஆடவலபெருமான். 23. ஆத்திச்சூடி. 24. ஆத்தியன். 25. ஆழியளித்தோன். 26. ஆனன். 27. ஆனையுரித்தோன். 28. ஆறுசூடி. 29. ஆலமர்கடவுள். 30. ஆலமர்செல்வன். 31. இறை. 32. இறையான். 33. இறையோன். 34. இறைவன். 35. ஈமத்தாடி. 36. எட்டுக்கொண்டார். 37. எண்டோளன். 38. எரியாடி. 39. ஏறூர்ந்தோன். 40. ஐந்துமுகத்தோன். 41. ஐந்தொழிலன். 42. ஐம்முகன். 43. ஒற்றியூரன். 44. கட்டங்கன். 45. கட்டுவாங்கன். 46. கடுக்கைசூடி. 47. கணிச்சியோன். 48. கண்ணுதல். 49. கண்ணுதலான். 50. கறைமிடற்றான். 51. கலையுருவினோன். 52. குன்றவில்லி. 53. கூத்தன். 54. கூற்றுதைத்தோன். 55. கொலைவன். 56. கொன்றைசூடி. 57. சடையன். 58. சடையப்பன். 59. சடையோன். 60. சிற்றம்பலவன். 61. சிவன். 62. சுடலையாடி. 63. சூலி...

சினம் (Anger) - தமிழ்ச்சொற்கள்

சினம் (Anger) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:   1. அரிப்பு. 2. அரில். 3. அழற்சி. 4. அழற்றி. 5. அழல். 6. உச்சடை. 7. உடற்சி. 8. உருப்பு. 9. உருப்பம். 10. உறுக்கு. 11. எரிச்சல். 12. எரிவு. 13. கடம். 14. கடு. 15. கடுப்பு. 16. கடுமை. 17. கதவு. 18. கதம். 19. கதவு. 20. கதழ். 21. கலாம். 22. கவரம். 23. கறு. 24. கறுப்பு. 25. கறுவம். 26. கறுவு. 27. கன்றல். 28. கனல்வு. 29. கனற்சி. 30. கனறல். 31. காட்டம். 32. காண்டு. 33. காந்தல். 34. காந்தாளம். 35. காரம். 36. கிளர்ச்சி. 37. கேந்தி. 38. கொதி. 39. கொதிப்பு. 40. கொந்து. 41. சிலை. 42. சிவப்பு. 43. சிவிட்கு. 44. சின். 45. சினப்பு. 46. சினம். 47. சீற்றம். 48. சீறு. 49. சுள்ளக்கம். 50. சுளிவு. 51. சுறாளம். 52. சுளி. 53. சூடு. 54. செக்கம். 55. செயிர். 56. செயிர்ப்பு. 57. செற்றம். 58. செறல். 59. செறு. 60. செறும்பு . 61. தீ. 62. தீய். 63. துடிப்பு. 64. துனி. 65. தெறல். 66. தெறு. 67. நோப்பாளம். 68. புழுங்கல். 69. கரிப்பு. 70. மத்திரிப்பு. 71. மற்கு. 72. மறம். 73. முகச்சாய்ப்பு. 74. முடக்கு. 75. முணவல். 76. முழிப்பு. 77. முனவல். 78. முனிவு. 79. ம...

மாலை (Evening) - தமிழ்ச்சொற்கள்

மாலை (Evening) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள் 1. அத்தாழம். 2. அந்தி. 3. அல். 4. இளநேரம். 5. சரிபொழுது. 6. சாயுங்காலம். 7. செக்கர். 8. செக்கல். 9. தணிந்தவேளை. 10. நாயிறுபோது. 11. நிழற்சரிவு. 12. மயண்டை. 13. மாலை. 14. மைமல். 15. வைகாலம். #சொற்றொகுப்பு

குரங்கு (Monkey) - தமிழ்ச்சொற்கள்

குரங்கு (Monkey) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அரி. 2. கச்சகம். 3. கவி. 4. கானவன். 5. குரக்கு. 6. குரங்கு. 7. கூலம். 8. கோட்டம். 9. கோட்டரம். 10. கோடரம். 11. கோந்தி. 12. கோலம். 13. செதுக்கு. 14. சொக்கன். 15. தித்தி. 16. மந்தி. #சொற்றொகுப்பு

அணை (dam) - தமிழ்ச்சொற்கள்

அணை (dam) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அணை. 2. ஒட்டு. 3. கங்கு. 4. கட்டு. 5. கட்டை. 6. குரம்பு. 7. சிறை. 8. பாலம். 9. மறிசல். 10. வரம்பு. #சொற்றொகுப்பு

மன்னன்

#மன்னன்: மன்னு-தல் = நிலைபெறுதல்; To be permanent; to endure, தங்குதல்; To remain long; to stay 'மன்' எனும் வினையடி, தங்கும் மாந்தரை முதலில் குறித்துப் பின் நிலைபெற்றிருக்கும் அரசனையும் குறிக்கும். மன் (< மன்னு) = அரசன்; King, தலைவன்; Lord, chief, கணவன்; Husband மன்னன் ( < மன்) = அரசன்; King, எப்பொருட்கு மிறை வன்; The Universal Lord, தலைவன்; Chief, கணவன், ஆடவன்; Man in his prime, between the ages of 32 and 48 மன்னவன் = மன்னன்; king மன்னறம் (மன்+அறம்) = அரச அறம்; Duties of sovereignty. மன்பதை ( < மன்பது) = படை; Army, மக்கட்பரப்பு; Humanity மன்பது = மன்பதை மன்னுமான் (< மன்னு) கடவுள்; God, as the Eternal Being Malayalam. mannan, mannavan king Kannada. manneya chieftain, commander Telugu. manniya, manniyãḍu, mannī˜ḍu, manne, mannẽḍu, mannekã̄ḍu lord, suzerain, chief, chieftain ஒப்புநோக்கத்தக்கன: மந்து = அரசன்; King, மனிதன்; Man மன்றம் = அவை; Hall, assembly, அறமன்றம்; Court, போர்க்களப்பரப்பின் நடுவிடம்; Central place in a battlefield. வீடு; House

வீசு

 #வீசு: '*விசு' எனும் முந்துவடிவத்திற்கு விரைவு எனும் பொருள் இருந்திருக்கலாம். *விசு > விசிறு-தல் = விசிறியால் காற்றெழுப்புதல்; To fan, வாள் முதலியவற்றை வீசுதல்; To wave to and fro, brandish, வலை முதலியவற்றை விரித்தெறிதல்; To fling, hurl, cast, as a net, சுழற்றுதல்; To whirl round, சொரிதல்; To pour forth; to sprinkle, வெளித் தள்ளுதல்; To eject, discharge, போக்குதல்; To remove, கை முதலியன வீசுதல்; To swing, as the arms in walking *விசு > விசை-த்தல் = விரைவு பண்ணுதல்; To hasten; to cause to move swiftly, வீசுதல்; To swing, துள்ளுதல்; To leap, hop, சிதறுதல்; To burst, split, கடுமையாதல்; To be forceful, கோபப்படுதல்; To become angry விசை = Force விசை = வேகம்; Haste, speed, impetus, நீண்டுசுருங்குந் தன்மை; Elasticity, spring. *விசு > வீசு-தல் = எறிதல்; To throw, fling, as a weapon; to cast, as a net, சிறகடித்தல்; To flap, as wings, ஆட்டுதல்; To swing, as the arm, இரட்டுதல்; To fan, சுழற்று தல்; To wave, flourish, as a sword, காற்று முதலியன அடித்தல்; To blow, as ...

அழு

 #அழு: 'அழு' எனும் வினையடி அழுதலைக் குறித்துப் பின் கத்தியழுதல், வருந்துதல், கத்துதல் என விரிகிறது. அழு-தல் = கண்ணீர்விடுதல்; To cry, weep, புலம்பிக் கதறுதல்; To cry aloud, lament, சிணுங்குதல்; To whine, வருந்துதல்; To crave அழு > அழுகை = அழுதல்; weeping, அவலம்; Pathetic sentiment அழுகுணி = அழுகிற குணமுள்ளவ ஆள்; Tearful person, one who is always crying அழை (< அழு) = அழுகை; Crying, weeping அழு > அழை-த்தல் = கதறுதல்; To cry out, utter a loud cry அழாஅல் (< அழு) = அழுகை; Weeping, crying அழு > அழுங்கு-தல் = அழுதல்; To weep அழுங்கு > அழுங்கல் = ஆரவாரம்; Loud noise, uproar Malayalam. "aḻuka to weep, cry" aḻaykkuka "to shout, cry out" Kota. ag- (aṛt-) to weep, cry agl, akl act of lamenting Kannada. aḻ, aḻu (aḻt-, att-) "to weep, cry" aḻ, aḻu, aḻa, aḻke, arke, akke "weeping, lamenting" aḻasu, aḻisu "to make to cry" aḻuvike "crying" aḻukuḷi "an easily crying or fretful person" Tulu. arpini "to we...

கிள் * - கிளை

#கிள்: *கிள் > கிளை-த்தல் = மரம் கப்புவிடுதல்; To branch out, பெருகுதல்; To multiply as families, நெருங்குதல்; To be close, to crowd. 'கிளை' எனும் வினையடியில் பல உறவுச் சொற்கள் கிளைக்கின்றன. கிளை = கப்பு; Branch, bough, தளிர்; Sprout, shoot, bud, பூங்கொத்து; Bouquet, bunch of flowers, சுற்றம், உறவு; Kindred, relations, பகுப்பு; Section, division, இனம்; Class, group, herd, flock, shoal, company, family, horde, race. கிளை > கிளைஞர் = உறவினர்; Kinsfolk, relations, நட்பினர்; Friends, companions, மருதநிலமக்கள்; Inhabitants of an agricultural tract கிளை > கிளைமை = உறவு; Relationship கிளை > கிளையார் = நண்பர்; Friend கிளைப்பெயர் = சுற்றத்தை உணர்த்தும் பெயர்; Nouns signifying relationship * கிள் > .. > கேள் = உறவு; Kindred, relations, நட்பு; Friendship, நண்பன்; Friend, companion கேள் > கேள்மை - கேண்மை கேள் > கேளிர் = நண்பர்; Friends, சுற்றத்தார்; Relations. கேள் > கேண்மை = நட்பு; Friendship, intimacy , அருள்; Kindness, favour, benevolence, உறவு; Relation...